வீ. செ. கோவிந்தசாமி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீ. செ. கோவிந்தசாமி (V. C. Govindasamy; 15 செப்டம்பர் 1941 - 7 சூலை 2025) திராவிட முன்னேற்றக் கழகத்தை (திமுக) சார்ந்த தமிழ்நாட்டு அரசியலர் ஆவார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் காவேரிப்பட்டினம் தொகுதிக்கான உறுப்பினராக இருமுறை (1971-76; 1989-91) பணியாற்றினார்.[1][2][3]
மேலும்1984, 1991 & 2001 ஆகிய ஆண்டுகளில் திமுகவின் வேட்பாளராக காவேரிப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு உள்ளார்.[4]
இவர் ஒரு மொழிப்போராளியும் ஆவார். 2007 முதல் 2011 வரை மாவட்ட வேளாண் விற்பனை குழு தலைவராக இருந்தார்.
Remove ads
சாதனைகள்
- இவர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலகட்டத்தில் பையூர் மண்டல வேளாண் ஆராய்ச்சி நிலையம் 1973 மே மாதம் நிறுவப்பட்டது
- போச்சம்பள்ளியில் சூரியகாந்தி எண்ணெய் நிறுவனம் மீண்டும் திறக்கப்பட்டது
- பல்வேறு பள்ளிக்கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டன.
- ஆறு உழவர் சந்தைகள் இவர் வேளாண்மை விற்பனைக்குழு தலைவராக இருந்தபோது திறக்கப்பட்டது.
- கிருஷ்ணகிரியில் பால் குளிரூட்டும் நிலையம் கட்டப்பட்டது.
- முதன்முதலில் பையூரில் மாங்கூழ் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை இவரது முயற்சியால் நிறுவப்பட்டது.
- 1970களின் இறுதியில் ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்தில் இருந்த நக்சல் பாரி இயக்கத்தினர் பலர் திருந்தி ஜனநாயக வழியில் வாழ்ந்திட பெரிதும் உதவினார்.
Remove ads
வகித்த பதவிகள்
- ஊராட்சி தலைவர்
- சட்டமன்ற உறுப்பினர்
- மாவட்ட அமைதிக்குழு உறுப்பினர்
- கோவை வேளாண்மை பல்கலைக்கழக ஆட்சிப் பேரவை (Syndicate) உறுப்பினர்
- மாவட்ட வேளாண்மை விற்பனைக்குழு தலைவர்[5]
- மாவட்ட கூட்டுறவு வீட்டுவசதி துறை தலைவர்
- தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர்
- பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர்
- மொழிப்போர் தியாகி
கட்சியில் வகித்த பதவிகள்
- கிளைக்கழக செயலாளர்
- ஒன்றிய செயலாளர்
- மாவட்ட துணை செயலாளர்
- பொதுக்குழு உறுப்பினர்
- செயற்குழு உறுப்பினர்
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads