வி. டி. கிருஷ்ணமாச்சாரி
இந்திய அரசியல்வாதி, இந்தியக் குடியுரிமைப் பணியாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வாங்கல் திருவேங்கடாச்சாரி கிருஷ்ணமாச்சாரி அல்லது வி. டி. கிருஷ்ணமாச்சாரி (Vangal Thiruvenkatachari Krishnamachari) (8 பிப்ரவரி 1881 – 14 பிப்ரவரி 1964), சட்டப் படிப்பு மற்றும் இந்தியக் குடியியல் பணிகள் முடித்த இவர், பரோடா இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1927 முதல் 1944 வரையிலும்[1], பின்னர் ஜெய்பூர் இராச்சியத்தின் பிரதம அமைச்சராக 1946 முதல் 1949 முடிய பனியாற்றியவர். மேலும் இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர்.[2]
பின்னர் 1961 முதல் 1964 முடிய இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர்.
Remove ads
இளமை
தற்கால கரூர் மாவட்டத்தின், வாங்கல் கிராமத்தில் 8 பிப்ரவரி 1881ல் பிறந்த தி. கிருஷ்ணமாச்சாரி, பள்ளிப் படிப்பை வாங்கல் கிராமத்திலும், கல்லூரி மற்றும் பட்டப்படிப்பை முறையே, மாநிலக் கல்லூரி, சென்னை, சென்னை சட்டக் கல்லூரியிலும் முடித்தவர்.
இந்தியக் குடியியல் பணிகள்
இந்தியக் குடியியல் பணிகள் தேர்வில் வெற்றி பெற்ற வி. டி. கிருஷ்ணமாச்சாரி, 1913 முதல் 1919 முடிய சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] வருவாய்த் துறையின் கூடுதல் செயலாளாராகவும், பின்னர் விஜயநகரம் எஸ்டேட்டின் காப்பாளராக 1919 முதல் 1922 முடிய பணியாற்றினார்.
சுதேச சமஸ்தானங்களின் பிரதிநிதி
பிரித்தானிய இந்தியாவின் கீழிருந்த அனைத்து சுதேச சமஸ்தானங்களில் ஒன்றான ஜெய்பூர் இராச்சியத்தின் சார்பாக இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
படைப்புகள்
- V. T. Krishnamachari (1949). Speeches of V. T. Krishnamachari, Diwan, Jaipur State. Information Bureau.
- V. T. Krishnamachari (1952). Report on Indian and State Administrative Services and Problems of District Administration. Government of India.
- V. T. Krishnamachari (1958). Community Development in India. Government of India.
- V. T. Krishnamachari (1959). Planned Development and Efficient Administration. Government of India.
- V. T. Krishnamachari (1961). Planning in India. Orient Longman.
Remove ads
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads