வீட்ல விசேஷம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீட்ல விசேஷம் (Veetla Vishesham) என்பது ஆர்.ஜே. பாலாஜி மற்றும் என்.ஜே. சரவணன் இயக்கிய 2022 இந்திய தமிழ் மொழி நகைச்சுவை நாடகத் திரைப்படமாகும்.[1][2] இது பதாய் ஹோ என்னும் 2018 இந்தித் திரைப்படத்தின் மறு ஆக்கம் ஆகும்.[3] இத்திரைப்படம் ஜீ ஸ்டூடியோஸ், பேவியூ ப்ராஜெக்ட்ஸ் எல்.எல்.பி மற்றும் ரோமியோ பிக்ச்சர்ஸுடன் இணைந்து போனே கப்பூரால் தயாரிக்கப்பட்டது.
2022 ஆம் ஆண்டு சூன் மாதம் 17 அன்று திரையரங்குகளில் வெளியாகி[4] விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நேர்மறை மதிப்பாய்வுகளைப் பெற்றுள்ளது. நடிகர்களின் நடிப்பு, கதை மற்றும் முதன்மை முன்னணிகளின் நேரத்துக்கேற்ற நகைச்சுவைக்காகப் பாராட்டப்பட்டு வணிக வெற்றி அடைந்தது.
Remove ads
நடிகர்கள்
- உன்னி மற்றும் கிருஷ்ணவேணியின் மூத்த மகனான இளங்கோவாக ஆர்.ஜே. பாலாஜி
- கிருஷ்ணவேணியின் கணவனான உன்னி எனும் உன்னிக்கிருஷ்ணனாக சத்யராஜ்
- உன்னியின் மனைவி கிருஷ்ணவேணியாக ஊர்வசி
- இளங்கோவின் காதல் ஆர்வம் சௌமியாவாக அபர்ணா பாலமுரளி
- உன்னியின் தாயாக கே.பி.ஏ.சி. லலிதா
- சௌமியாவின் தாயாக பவித்திரா லோக்கேஷ்
- உன்னி மற்றும் கிருஷ்ணவேணியின் இளைய மகனான அநி எனும் அநிருத்தாக விஸ்வேஷ்
- இளங்கோவின் உறவுமுறை சகோதரியான ஷாலு எனும் ஷாலினியாக ஷிவானி நாராயணன்
- ஷாலுவின் தாய் மற்றும் உன்னியின் கொழுந்தியாக சீமா
- உன்னியின் அக்காவாக ரமா
- உன்னியின் அண்டை வீட்டாரான தீபாவாக தீபா
- மருத்துவராக ஜார்ஜ் மரியன்
- சௌமியாவின் பள்ளி ஆசிரியராகக் கவிதாலயா கிருஷ்ணன்
- உன்னியின் அண்டை வீட்டாரான தனமாக நக்கலைட்ஸ் தனம்
- கௌரவத் தோற்றத்தில் யோகி பாபு
Remove ads
இசை
இசை உரிமைகளை ஜீ மியூசிக் கம்பனி பெற்றுள்ளது. திரைப்படத்தின் இசை கிரிஷ் கோபாலகிருஷ்ணனால் இசையமைக்கப்பட்டது மற்றும் பாடல் வரிகள் பா. விஜயால் எழுதப்பட்டது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads