ஊர்வசி (நடிகை)

இந்தியத் திரைப்பட நடிகை From Wikipedia, the free encyclopedia

ஊர்வசி (நடிகை)
Remove ads

ஊர்வசி (பிறப்பு: 25 சனவரி 1967) இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவருடைய இயற்பெயர் கவிதா ரஞ்சினி. ஊர்வசி என்ற மேடைப் பெயரின் மூலமாக பரவலாக அறியப்படும் இவர் கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிப் படங்களில் நடித்துள்ளார். தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்குகொண்டு வருகிறார். மலையாள மொழிப் படங்களில் பிரதானமாக நடித்துள்ள இவர் கே.பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற படத்தின் மூலமாகத் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.

விரைவான உண்மைகள் ஊர்வசி, பிறப்பு ...
Remove ads

இளமை

ஊர்வசி பிரபல நாடக நடிகர்களான சாவர வி. பி. நாயர் மற்றும் விசயலட்சுமிக்கு மகளாக கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் சூரநாட்டில் பிறந்தார். இவரது மூத்த சகோதரிகள் நடிகர்கள் கலாரஞ்சினி மற்றும் கல்பனா.[2] இவரது இரு சகோதரர்களான கமல் ராய் மற்றும் இளவரசன் ஆகியோரும் சில மலையாளத் திரைப்படங்களில் நடித்துள்ளனர். இளவரசன் (லயணம் புகழ் நந்து) 26 வயதில் தற்கொலை செய்து கொண்டார்.[3]

ஊர்வசி தனது ஆரம்பக் கல்வியை திருவனந்தபுரத்தில் உள்ள கோட்டை பெண்கள் சேவை உயர்நிலைப் பள்ளியில் நான்காம் வகுப்பு வரையிலும், பின்னர் குடும்பம் சென்னைக்கு மாறியதால், கோடம்பாக்கத்தில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு வரையிலும் படித்தார்.[4] இதற்குள் திரைப்பட வாய்ப்புகள் அதிகமாக வந்ததால் படிப்பைத் தொடர ஊர்வசியால் முடியவில்லை.

முதலாவதாக, ஊர்வசி மூன்று படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். ஊர்வசிக்கு வாய்ப்புகள் அதிகமாக வந்துள்ளதை கண்ட பாக்யராஜ், தனது முந்தானை முடிச்சு திரைப்படத்தில் நடிக்க ஊர்வசியினை ஒப்பந்தம் செய்தார். முந்தானை முடிச்சி பட வெற்றி மூலம் தமது படமும் வெற்றி பெறலாம் என கருதிய பிற இயக்குனர்கள் ஊர்வசி முந்தானை முடிச்சு படத்தினை முதலில் முடிக்க உதவினார்கள்.

Remove ads

குடும்பம்

இவர் முதலில் மலையாள நடிகர் மனோஜ் கே.ஜெயன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. முதல் கணவருடனான சச்சரவு காரணமாக திருமண முறிவு பெற்றார். பின்னர் இவர் 2014ஆம் ஆண்டு தனது 47ஆம் வயதில் சிவ பிரசாத் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார்.[5]

திரைவாழ்க்கை

மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் சுமார் 702 படங்களில் ஊர்வசி நடித்துள்ளார். 1979ஆம் ஆண்டு வெளியான கதிர்மண்டபம் என்ற மலையாளத் திரைப்படத்தில் 10 வயதில் ஜெயபாரதியின் மகளாக குழந்தை நட்சத்திரமாக தனது நடிப்பைத் தொடங்கினார். ஊர்வசி 1980-ல் வெளியான திக்விஜயம் திரைப்படத்தில் ஸ்ரீவித்யாவின் நடன மாணவியாக நடித்தார். மதுமாசா நிகுஞ்சத்தில் என்ற பாடல் காட்சியில் கிருஷ்ணாவாக நடித்தார். இதில் இவரது சகோதரி கல்பனா இராதாவாக நடித்தார்.[6] 1983ஆம் ஆண்டு தமிழ்த் திரைப்படமான நினைவுகள் மறைவதில்லை என்ற திரைப்படத்திலும் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். ஆனால் இப்படம் வெளிவரவில்லை. இதன் பிறகு 1983ல் படப்பிடிப்பை முடித்து 1986ல் வெளியான தொடரும் உறவு படத்தில் கார்த்திக்குடன் தனது 13 வயதில் கதாநாயகியாக நடித்தார்.[7]

1983ஆம் ஆண்டு வெளியான கே. பாக்யராஜ் நடித்து இயக்கிய தமிழ் படமான முந்தானை முடிச்சு ஊர்வசி கதாநாயகியாக நடித்த முதல் தமிழ்த் திரைப்படம் ஆகும். எதிர்ப்புகள் என்பது இவரது முந்தைய மலையாளப் படங்களில் ஒன்றாகும். இவரது தொழில் வாழ்க்கையின் உச்சக்கட்டத்தில், 1995-ல் எம். பி. சுகுமாரன் நாயரின் விருது பெற்ற திரைப்படமான கழகத்தில் ஒரு பைசா கூட சம்பம் வாங்காமல் நடித்தார். இந்தப் படத்தில் நடித்தற்காக ஊர்வசிக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. இவர் சில விளம்பரங்களிலும் நடித்துள்ளார். மேலும் பல மேடை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார்.

தமிழ் சினிமாவில் உலக நாயகனான கமல்ஹாசனுடன் அந்த ஒரு நிமிடம் உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார்.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads