வீரராகவ முதலியார்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வீரராகவ முதலியார் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தொண்டைநாட்டுத் தமிழ்ப் புலவராவார்.
![]() | இக்கட்டுரை அல்லது கட்டுரைப்பகுதி அந்தகக்கவி வீரராகவ முதலியார் கட்டுரையுடன் ஒன்றிணைக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. (கலந்துரையாடவும்) |
பிறப்பு
தொண்டை நாட்டில் உள்ள பூதூரைச் சேர்ந்த வடுகநாத முதலியாருக்கு மகனாக பிறந்த வீரராகவ முதலியார், இளமையில் அந்நாட்டின் தலைநகரான காஞ்சிமாநகர் சென்று அங்கு தமிழ் கற்றார். அருணகிரிநாதர், வில்லிபுத்தூரார் காலத்தில் வாழ்ந்த இவர் வசிப்பிடம் பொற்களந்தை என்பர். பார்வை இல்லாத காரணத்தால் இவர் அந்தகக் கவி வீரராகவ முதலியார் என்றும் அழைக்கப்படுவர். எடாயிரங் கோடி யெழுதாது தன் மனத் தெழுதிப் படித்த விரகர் என்று இவரின் ஞாபகத்தில் வைத்து செய்யுள் பாடும் திறமையைப் புகழ்வார்.
Remove ads
இலக்கியப் பங்களிப்பு
இவர் பாதேயத்தை நாய் கவர்ந்தோடியபோது சீராடை என்ற தனிநிலைக் கவி பாடினவர். அக்காலத்தில் வாழ்ந்த மன்னர்கள் மற்றும் பிரபுக்கள் சிலர் மீது செய்யுள் கூறிப் பல பரிசில்கள் பெற்றவர்.மேலும் யாழ்ப்பாணம் வந்து பரராசசேகர மன்னவர் முன் செய்யுள் அரங்கேற்றி அரிய பரிசில்களும் பெற்றது மட்டுமில்லாது இப்பெருமையை ஈழ மண்டல மளவுந் திறைகொண்ட கவி வீரராகவன் வீடுக்கு மோலை என்று தனது சிட்டுக் கவியிலுஞ் சுட்டிக் காட்டியவர். மேலும் பரராசசேகர மன்னனால் பாடப்பட்டு புகழ் பெற்றவர். பார்வையற்றவரான இவர் வில்லேந்தி நின்ற பரராசசேகர மன்னவரை வருணித்து அரிய வெண்பா ஒன்று கூறியவர். இவர் பல தனி நிலைச் செய்யுள்களையும் கழுக்குன்றப்புராணம், கழுக்குன்றமாலை, சந்திரவாணன் கோவை, திருவாரூருலா, சேயூர்க்கலம்பகம், சேயூர்முருகன்பிள்ளைத்தமிழ், கயத்தாற்றரசனுலா முதலிய பிரபந்தங்களை இயற்றியுள்ளார். மேலும் சேயூர்முருகன்பிள்ளைத்தமிழ் என்னும் பாவில் ஐயதென் கதிர்காமமென்னும்மலைமுதலாய் என்று கதிர்காமத்தை புகழ்ந்து பாடியுள்ளார்.[1].
இவர் பாடிய சில பாடல்களை ஈண்டு தருதும்:-
இவர் கட்டுச்சோற்றை நாய் கவர்ந்த போது, இவர் கூறிய கட்டளைக்கலித்துறை.
சீராடை யற்ற வயிரவன் வாகனஞ் சேரவந்து பாராறு நான்முகன் வாகனந் தன்னைமுன் பறறிக்கவ்வி நாரா யணனுயர் வாகன மாயிற்று நமமைமுகம் பாரான்மை வாகனன் வந்தே வயிற்றினிற் பற்றினனே
பரராசசேகர மன்னவர் கையில் வில்லும் அம்பும் கொடுத்து, அவர் கோலம் எவ்வாறு என்று வினாவிய அமைச்சர்களுக்கு, பார்வையற்றவரான இவர் வெண்பாவில் கூறிய பதில்.
வாழு மிலங்கைக்கோ மானில்லை மானில்லை ஏழு மராமரமோ வீ ங்கில்லை- ஆழி அலையடைத்த செங்கை யபிராமா வின்று சிலையெடுத்த வாறேமக்குச் செப்பு
கழுக்குன்றமாலை பா ஒன்றைக் கீழே காட்டுதும்:-
மாடேறு தாளு மதியேறு சென்னியு மாமறையோன் ஓடேறு கையு முடையார் தமக்கிட மூருழவர் சூடேறு சங்கஞ் சொரிமுத்தை முட்டையென் றேகமலக் காடேறு மன்னஞ் சிறகா லணைக்குங் கழுக்குன்றமே,,
இவரின் பிரபந்தம் ஆகிய சந்திரவாணன் கோவையில் இருந்து ஒரு பாடலை கீழே காட்டுதும்
மாலே நிகராகுஞ் சந்திர வாணன் வரையிடத்தே பாலேரி பாயச்செந் தேன்மாரி பெய்யநற் பாகுகற்கண் டாலே யெருவிட முப்பழச் சாற்றி னமுதவயன் மேலே முளைத்த கரும்போவிம் மங்கைக்கு மெய்யெங்குமே
Remove ads
இவற்றையும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads