வெங்கடகிரி
ஆந்திர மாநிலத்திலுள்ள நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெங்கடகிரி ( Venkatagiri ) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரமாகும். இது வெங்கடகிரி மண்டலத்தின் நகராட்சியும் வெங்கடகிரி மண்டலத் தலைமையகமும் ஆகும்.[3] வெங்கடகிரியின் பழைய பெயர் "காளி மில்லி". வரலாற்று சிறப்பு மிக்க இந்த நகரம் கைத்தறி பருத்தி புடவைகளுக்கு பிரபலமானது. இது இந்திய குடியரசில் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு சிறிய இராச்சியத்தின் ஒரு பகுதியாகும்.
Remove ads
வரலாறு
வெங்கடகிரி முதலில் 17ஆம் நூற்றாண்டில் வரை காளி மில்லி என அறியப்பட்டது. விஜயநகர பேரரசின் கீழ் கோபுரி பாளையக்காரர்களால் ஆளபட்டு வந்தது. விஜயநகரத்தின் அரவிடு வம்சத்தைச் சேர்ந்த இரண்டாம் பெத்த வெங்கடபதி ராயனின் உறவினரும் மதுராந்தகத்தின் நாயக்கனும் வேலுகோட்டி ராஜாவின் மருமகனுமான இரெச்செர்லா வெங்கடாத்ரி நாயுடுவால் தோற்கடிக்கப்பட்டனர். பின்னர், இந்த கிராமத்திற்கு வெங்கடகிரி என்று பெயர் மாற்றப்பட்டது.[4] 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் வேலகோட்டி ஆட்சியாளர்கள் தங்கள் தலைநகரை வெங்கடகிரிக்கு மாற்றினர். அது இந்தியாவின் சுதந்திரம் வரை ஒரு ஜமீந்தாரியாக நீடித்தது.[5] இது கைவல்ய ஆறு மற்றும் கோதேரு ஆறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கிடையில் அமைந்துள்ளது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads