பாளையக்காரர்

பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார் From Wikipedia, the free encyclopedia

பாளையக்காரர்
Remove ads

பாளைக்காரர் (Polygar) தமிழகத்தில் விஜயநகரப் பேரரசின் ஆட்சி நடைபெற்றபோது, 1529-க்கும், 1564-க்கும் இடையில் மதுரை மண்டலத்தை நிர்வகித்தவர் விசுவநாத நாயக்கர். இவரால் தனது மாகாணங்களில் அதிகாரங்களைப் பெற விரும்பிய சிறுகுடித் தலைவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால் அவரது அமைச்சர் அரியநாத முதலியாருடன் கலந்தாலோசித்து, ஆந்திராவை ஆண்ட காக்கத்தியர் இராச்ச்சியத்தில் நடைமுறையில் இருந்த பாளையக்கார முறையை 1529-இல் ஏற்படுத்தினார்.[1] இது இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும். இப்பாளையத்தை நிர்வாகம் செய்வதற்காக நியமிக்கப்பட்ட தலைவன் பாளையக்காரர் எனப்பட்டார். 17ஆம் மற்றும் 18ஆம் நூற்றாண்டுகளின் பிற்பகுதியில் தெலுங்கு பகுதி மற்றும் தமிழ்ப் பகுதியின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்திய பாளையக்காரர்கள் பெரும்பாலோர், கள்ளர், மறவர் மற்றும் வடுகா சமூகங்களிலிருந்து வந்தவர்கள்.[2] [3] ஒவ்வொரு பாளையக்காரரும் ஒரு பிரதேசத்தின் அல்லது பாளையத்தின் உரிமையாளராக கருதப்பட்டார். இந்த பாளையக்காரர்கள், நாயக்கர்களுக்கு தேவை ஏற்படும் போது இராணுவம் மற்றும் இதர உதவிகளை முழு மனதுடன் செய்தனர். பாளையக்காரர்கள் வரிகளை வசூலித்து, தாங்கள் வசூலித்த வரிப்பணத்தில் மூன்றில் ஒரு பங்கினை மதுரை நாயக்கர்களுக்கும், அடுத்த மூன்றில் ஒரு பங்கினை இராணுவ செலவிற்கும் கொடுத்துவிட்டு மீதியை அவர்கள் சொந்த பாளையக்காரச் செலவிற்கு வைத்துக்கொண்டனர். 1801 ஜூலை 31ல்‌ செய்துகொள்ளப்பட்ட கர்நாடக உடன்படிக்கைப்படி தமிழ்நாட்டின்‌ மீது ஆங்கிலேயர்‌ நேரடி கட்டுப்பாட்டைப்‌ பெற்றனர்‌ இதனால்‌ பாளைக்காரர்‌ முறை நீக்கப்பட்டது.[4]

Thumb
தென் தமிழகத்தில் 1700-இல் பாளையக்கார் ஆட்சியில் இருந்த பகுதிகள் (மஞ்சள் நிறத்தில்)
Remove ads

பாளையங்கள்

முதன்மைக் கட்டுரை:பாளையம் (ஆட்சி நிர்வாக முறை)
"பாலாமு” என்கிற தெலுங்கு மொழிச் சொல்லிலிருந்து பாளையம் என்ற சொல் உருவானது. பாலாமு என்றால் படை முகாம் என்று பொருள்படும். இம்முறையின் கீழ் மதுரை மண்டலம் 72 பாளையங்களாகப் பிரிக்கப்பட்டது. இப்பாளையம் ஒவ்வொன்றும் ஒரு படைநிலை ஆகும்.[5]

கடமையும், அதிகாரமும்

மண்டல அரசு, ஒரு குறிப்பிட்ட நிலப் பகுதியைப் பாளையக்காரர்களின் நிர்வாகப் பொறுப்பில் விடும். இதற்குப் பதிலாகப் பாளையக்காரர்கள் அரசின் பாதுகாப்புக்காகத் தேவையான இராணுவ வளங்களைக் கொடுக்கவேண்டும். பாளையப்பட்டுகளுக்குள் அடங்கும் நிலங்களுள் ஒருபகுதியைத் தங்கள் சொந்தப் பயன்பாட்டுக்கு வைத்துக் கொள்ளும் பாளையக்காரர்கள், மிகுதியை, இராணுவ வளங்களைத் திரட்ட உதவக்கூடிய செல்வாக்குள்ள குடிமக்களில் சிலருக்குப் பிரித்து வழங்கினர்.

பாளையக்காரர்களின் நிர்வாகம்

தங்களுடைய நிர்வாகத்துக்குள் அடங்கிய பகுதியில் ஓரளவு சுயமான அதிகாரத்துடன்கூடிய ஆட்சியதிகாரம் பாளையக்காரர்களுக்கு இருந்தது. பாளையப்பட்டுகளுக்கெனத் தனியான நிர்வாக அமைப்பும் இருந்தது. இந்த அமைப்பிலே பாளையக்காரர்களின் கீழ் அமைச்சராகவும், படைத் தளபதியாகவும் செயற்படக்கூடிய தளவாய் ஒருவரும், பாளையப்பட்டுக்கு மேலுள்ள அரசு தொடர்பான விடயங்களைக் கவனிக்கத் தானாபதி ஒருவரும் இருந்தனர்.

உரிமைகள்

பாளையங்களின் பாதுகாப்பு, நிருவாகம், சட்டம் ஒழுங்குப் பராமரிப்பு, வரி வசூலிப்பு போன்ற விடயங்களில் பாளையக்காரர்களுக்கு உரிமைகள் இருந்தன. படை திரட்டி அவற்றைப் பாராமரிக்கவும், பாளயத்தின் பாதுகாப்புக்காகக் கோட்டைகளைக் கட்டிக்கொள்ளவும், நீதி விசாரணைகளை நடத்தித் தீர்ப்பு மற்றும் தண்டனைகள் வழங்கவும் பாளையக்காரர் அதிகாரம் பெற்றிருந்தனர். தங்களுடைய அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வாழும் குடிமக்களிடம் வரி அறவிடும் உரிமை இவர்களுக்கு இருந்தது. இவ்வாறு அறவிடப்படும் வரி, மன்னருக்கான கொடுப்பனவு, பாளையக்காரர்களின் சொந்தச் செலவு மற்றும் பாளையத்து நிர்வாகச் செலவு என்பவற்றுக்காகச் சமமாகப் பங்கிடப்பட்டது.

Remove ads

பாளையக்காரரின் பங்களிப்புகள்

முழு நாட்டின் பாதுகாப்புக்காகவும், வலிமைப் பெருக்கத்துக்காகவும், வேறு பல காரணங்களுக்காகவும், நாட்டின் மன்னர்கள் ஈடுபடும் போர்களில் உதவியாக நின்று போர்புரிந்து வெற்றி தோல்விகளைப் பாளையக்காரர்கள் தீர்மானித்துள்ளார்கள். அரசுரிமைப் போட்டி, உள்நாட்டுக் கலகங்கள் போன்றவற்றிலும் பாளையக்காரர்களின் பங்கு பல சந்தர்ப்பங்களில் முக்கியமானதாக இருந்ததுண்டு. பிற்காலங்களில் மன்னர்கள் வெள்ளையர் ஆதிக்கங்களுக்குப் பணிந்த பின்னரும், பாளையக்காரர்கள் அவர்களை எதிர்த்து நின்ற வரலாறுகளும் உண்டு.

பாளையங்களும், பாளையக்கார்களும்

பாளையங்கள்

  1. அம்மையநாயக்கனூர் பாளையம்
  2. அம்பாத்துறை பாளையம்
  3. உடையார் பாளையம்
  4. உத்தம பாளையம்
  5. ஊத்துமலை பாளையம்
  6. எட்டயபுரம் பாளையம்
  7. நடுவன்குறிச்சி பாளையம்
  8. நாகலாபுரம் எட்டயபுரம்
  9. கந்தர்வக்கோட்டை பாளையம்
  10. கண்டமநாயக்கனூர் பாளையம்
  11. கன்னிவாடி பாளையம்
  12. கல்லாக்கோட்டை பாளையம்
  13. கொல்லங்கொண்டான் பாளையம்
  14. சமத்தூர் பாளையம்
  15. சாத்தூர் பாளையம்
  16. சிங்கம்பட்டி பாளையம்
  17. சிங்கவனம் பாளையம்
  18. சிவகிரி பாளையம்
  19. சொக்கம்பட்டி பாளையம்
  20. சேத்தூர் பாளையம்
  21. நெடுவாசல் பாளையம்
  22. நெற்கட்டும்சேவல் பாளையம்
  23. நிலக்கோட்டை பாளையம்
  24. நத்தம் பாளையம்
  25. தலைவன்கோட்டை
  26. பாப்பாநாடு பாளையம்
  27. பாகலூர் பாளையம்
  28. பாலையவனம் பாளையம்
  29. பாஞ்சாலங்குறிச்சி பாளையம்
  30. புனவாசல் பாளையம்
  31. போடிநாயக்கனூர் பாளையம்
  32. விருப்பாச்சி பாளையம்


பாளையக்காரர்கள்

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads