வெங்காயம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெங்காயம் (தாவர வகைப்பாடு : Allium cepa) குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தாவரம். இது இந்தியா, பாக்கித்தான், ஆப்கானித்தான், ஈரான் ஆகிய நாடுகளில் பரவலாக சமையலில் பயன்படுத்தப்படுகின்றது. மேலும் வெங்காயத் தாளும் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
Remove ads
ஊட்டச்சத்துகள்
வெங்காயத்தில் 89% நீரும், 9% மாவுப் பொருளும் (இதில் 4% இனிப்பு, 2% நார்ச்சத்து) சிறிதளவு கொழுப்புப் பொருட்களும் உள்ளன. வெங்காயத்தில் மிகக் குறைந்த அளவே ஊட்டச்சத்துகள் உள்ளன. 100 கிராம் எடையுடைய வெங்காயத்தில் 166 கி.ஜூ (KJ) (40 கலோரிகள்) சக்தி அடங்கியுள்ளது.
வெங்காயத்தின் கட்டமைப்பு
வெங்காயத்தின் நெடுக்காக வெட்டப்பட்ட அமைப்பில் அதன் உருவவியல் தோற்றத்தைக் காணலாம். தண்டு தட்டியாக்கப்பட்டதாக அமைய முனையரும்பு நடுவில் அமையும். பக்கங்களில் கக்கவரும்புகள் காணப்படும். முனையருப்பிலிருந்து நடுவில் குழாயுருவான இலை காணப்படும். செதிலிலைகளில் உணவு சேமிக்கப்படும்.
கண்ணில் நீர் வரக் காரணம்
வெங்காயம் நறுக்கும் போது அதன் இதழ்களில் காணப்படும் ஆலினேஸ் என்ற நொதி அந்த இதழ்களில் காணப்படும் புரோப்பினிசிஸ்டைன் சல்பாக்சைடு என்ற பொருள் மீது வினை புரிந்து புரோப்பின் சல்பினிக் அமிலமாக மாறுகிறது. இந்த அமிலம் எளிதில் ஆவியாகி காற்றில் கலந்து நம் கண்களை அடைந்து உறுத்துகிறது. அதன் விளைவாக கண்ணீர் சுரப்பியிலிருந்து நீர் சுரந்து வெளியேறுகிறது.
உற்பத்தி
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads