வெடிமருந்து

From Wikipedia, the free encyclopedia

வெடிமருந்து
Remove ads

வெடிமருந்து (Gunpowder) என்பது மிகப் பழைய வேதியியல் வெடிபொருளாகும். இது கந்தகம், கரி, பொட்டாசியம் நைத்திரேட்டு ஆகியவற்றைக் கொண்ட ஒரு வெடிபொருள் கலவை ஆகும். இதில் உள்ள கந்தகமும் கரியும் எரிபொருள்களாகவும் பொட்டாசியம் நைட்டிரேட்டு உயிரகமேற்றியாகவும் பயன்படுகின்றன.[1][2] மிக விரைவாக எரிந்து சூடான திண்மங்களையும் பெரிய பருமனளவுள்ள வளிமங்களையும் உண்டாக்கக்கூடிய இயல்பால், இது சுடுகலன்களில் உந்துவிசையை உருவாக்கவும், பட்டாசுகளிலும் ஏவூர்திகளிலும் பயன்படுகின்றது. மேலும் கல்லுடைப்பிலும் சுருங்கைகளிலும் சாலை அமைக்கவும் கூட இது பயன்படுகிறது.

Thumb
FFG மணியளவுள்ள, துப்பாக்கிக் குழல்களில் புகட்டுவதற்கான, தற்காலப் பதிலி வெடித்தூள்
Thumb
FFFg மணியளவுள்ள, சுடுகலன்களிலும் கைத்துப்பாக்கிகளிலும் குழல்களுக்குப் புகட்டும், வெடிமருந்துத் தூள். ஒப்பீட்டுக்காக 24 மிமீ அமெரிக்கக் குவார்ட்டர் நாணயம் காட்டப்பட்டுள்ளது.

வெடிமருந்து 9 ஆம் நூற்றாண்டில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டு, 13 ஆம் நூற்றாண்உக்குள் ஐரோப்பாசிய முழுவதும் பரவிவிட்டது.[3] பெரும்பாலான வெடிமருந்துகள் சீனாவிலும், மத்திய கிழக்கு பகுதிகளிலும், ஐரோப்பாவிலும் நடந்ததென்றும், வெடிமருந்தின் துல்லியமான தோற்ற இடம் குறித்த பிணக்கு இன்றும் தொடர்ந்தவண்ணமே உள்ளது.[4][5]

வெடிமருந்து, சிதைவடையும்போது ஒப்பீட்டளவில் மெதுவாகச் சிதைவடைவதால் அதனால் மெதுவாக எரிதலாலும் தாழ்நிலை வெடிபொருளாக வகைப்படுத்தப்படுகிறது. உயர்நிலை வெடிபொருட்கள் வெடிப்புத் தூண்டலினால் (detonation) ஒலியினும் மிகுந்த வேகம் கொண்ட அழுத்த அலைகளை உருவாக்கும்போது, தாழ்நிலை வெடிபொருட்கள் எரிந்து ஒலியினும் குறைவான வேகம் கொண்ட அழுத்த அலைகளையே உருவாக்குகின்றன. வெடிமருந்து எரிவதனால் உருவாகும் வளிமங்களின் அழுத்தம் துப்பாக்கிக் குண்டுகளை உந்துவதற்குப் போதுமானது எனினும், சுடுகலனின் குழாயைச் சிதைக்கும் அளவுக்குப் போதியது அல்ல. இதனால், பாறைகளையோ உறுதியாக அரண்களையோ உடைப்பதற்கு "வெடிமருந்து" பொருத்தமானது அல்ல. இத்தகைய தேவைகளுக்கு டி.என்.டி எனப்படும் முந்நைத்திரோ தொலுயீன் போன்ற உயர் வெடிபொருட்கள் தேவைப்படுகின்றன. என்றாலும் 19 ஆம் நூற்றாண்டின் இடைப்பகுதியில் உயர்வெடிபொருள்கள் தோன்றும் வரை படைத்துறையிலும் தொழில்துறையிலும் பயன்பாட்டி இருந்துவந்தது. மேலும் டைனமைட், அம்மோனியம் நைட்டிரேட்டு/எரிம எண்ணெய் (ANFO) ஆகியவற்றை ஒப்பிடும்போது இதன் அடக்கவிலை கூடுதலாக அமைவதால் வழக்கில் இருந்து வீழ்ந்துவிட்டது.[6][7] இன்று வெடிமருந்து வேட்டையாடல், இலக்கு சுடுதல் பயிற்சி, எரிகுண்டற்ற வரலாற்று நிகழ்ச்சிப்படம் எடுத்தல் ஆகியவற்றில் மட்டுமே பயன்படுகிறது.

Remove ads

வரலாறு

Thumb
வெடிமருந்துக்கான எழுதப்ப்ட்ட மிகப் பழைய வாய்பாடு, வூசிங் சாங்யாவோ , 1044 AD.
Thumb
காற்றுக் குண்டை நோக்கிச் செல்லும் ஒரு மாயத் தீ விண்கல், குவோலாங்யிங் கி.பி. 1350.
Thumb
யப்பானில் Tetsuhau (இரும்புக் குண்டு) அல்லது சீன மொழியில் Zhentianlei (இடி நொறுக்கும் குண்டு)எனப்படும் கற்கலக் குண்டு, தகாசிமா கப்பற்சிதிலத்தில் கிடைத்தது. அக்தோபர் 2011, யப்பானை மங்கோலியர்கள் முற்றுகையிட்ட (கி.பி 1271–1284) காலத்தினது.

மிகப் பழைய வெடிமருந்துக்கான வாய்பாடு சீனாவில் 11 ஆம் நூற்றாண்டில் சாங் பேரரசில் எழுதப்பட்ட வூசிங் சாங்யாவோ எனும் பனுவலில் உள்ளது.[8] என்றாலும் 10 ஆம் நூற்றாண்டு முதலே சீனாவில் தீயம்புகளில் வெடிமருந்து பயன்பட்டுள்ளது. பிந்தைய நூற்றாண்டுகளில், சீனாவில் குண்டுகள், தீயெறிகள், சுடுகலன் போன்ற வெடிமருந்து ஆயுதங்கள் தோன்றி அங்கிருந்து ஐரோப்பாசியா முழுவதும் பரவியுள்ளது.[3] மிகப் பழைய வெடிமருந்து பற்றிய மேலைய நாடுகள் சார்ந்த விவரம் 13 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய மெய்யியலாராகிய உரோசர் பேக்கன் எழுதிய நூல்களில் இருந்து கிடைக்கிறது.[9]

வெடிமருந்து தோன்றிய காலத்தை அறிவதில் உள்ல பெருஞ்சிக்கலே அவை உருவாகிய காலத்துக்கு நெருங்கிய கால விவரிப்புகள் அல்லது படிமங்கள் கிடைக்காததே ஆகும். கிடைக்கும் முதல் பதிவுகள், பெரும்பாலும் நிகழ்வுகள் தோன்றிய காலத்துக்கு சில நூற்றாண்டுகளுக்குப் பின்னரானதாகவே அமைகின்றன. இவை தகவல் தருவோரின் சமகால பட்டறிவால் கைவண்ணம் கலந்ததாகவே அமைகிறது.[10]சீன இரசவாத நூல்களை ஆங்கிலத்தில் உள்ள நன்கு வரையறுத்த அண்மைய அறிவியல் வளத்துடன் துல்லியமாக மொழிபெயர்ப்பது அரிய பணியாகும். அவை நிகழ்வுகளை உருவகமுறையிலேயே விவரிக்கின்றன. மொழிபெயர்ப்புச் சிக்கல்கள் கலைநய விடுதலையை பெற்றிருந்ததால் பிழைகளுக்கும் அல்லது குழம்பிய விளக்கங்களுக்குமே இட்டுச் சென்றன.[11]எடுத்துகாட்டாக, naft எனும் அரபுச் சொல் நாப்தாவைக் குறிப்பதில் இருந்து பெயர்ந்து வெடிமருந்தைக் குறிப்பதாகவும் pào எனும் சீனமொழிச் சொல் catapult இல் இருந்து cannon ஐக் குறிப்பதாகவும் பொருண்மை மாற்றத்துக்கு ஆட்படுகிறது.[12] இது வேர்ச்சொல்லின் அடிப்படையில் உண்மையான வெடிமருந்தின் தோற்றத்தை அறிவதில் விவாதங்களை எழுப்புகிறது. அறிவியல் தொழில்நுட்ப வரலாற்றாசிரியரான பெர்ட் எசு. ஃஆல் பின்வரும் கவனிப்பைக் கூறுகிறார்:

சொல்லாமலே இது நமக்கு விளங்குவதே. என்றாலும், வரலாற்றாசிரியர்கள் தம் சொந்தநிலையை எளிதாக நிலைநிறுத்த இவ்வகைச் சொற்குழப்பங்கள் ஊடாக செறிவான பொருளைக் காண முயல்கின்றனர்.[13]

பெர்ட் எசு. ஃஆல்

சீனா

கி.பி. முதல் நூற்றாண்டின் இடைப்பகுதியிலேயே சீனர் நைட்டிரேட்டு எனும் (வெடியுப்பு) பற்றி அறிந்திருந்தனர். வெடியுப்பு சீச்சுவான், சாங்கி, சாந்தோங் ஆகிய மாநிங்களில் செய்யப்பட்டது.[14] பல்வேறு மருந்துச் சேர்மானங்களிலும் வெடியுப்பும் கந்தகமும் பயன்படுத்தியமைக்கான உறுதியான சான்று கிடைக்கிறது.[15] 492 ஆம் ஆண்டைச் சார்ந்த ஒரு சீன இரசவாத நூல் வெடியுப்பு ஊதா நிறத்தில் எரிவதாக்க் கூறுகிறது. இக்குறிப்பு பிற கனிம உப்புகளில் இருந்து பிரித்துணரும் நம்பத்தகுந்த நடைமுறை இருந்துள்ளதை அறிவிக்கிறது. இது இரசவாதிகள் தூய்மிப்பு நுட்பங்களை ஒப்பிடவும் மதிப்பிடவும் உதவியுள்ளது; வெடியுப்பு தூய்மிப்பு பற்றிய மிகப் பழைய விவரங்கள் இலத்தீன மொழியில் கி.பி. 1200 அளவில் தான் கிடைக்கின்றன.[16]

இந்த வெடிகலவைகளின் தீய விளைவுகள், 9 ஆம் நூற்றாண்டு தாவோ மெய்யியல் நூலாகிய சென்யுவான் மியாதாவோ யாவோலுயே இல் விவரிக்கப்படுகின்றன:[17] "சிலர் கந்தகத்தையும் வெடியுப்பையும் தேனுடன் கலந்து எரித்தனர். புகையும் தணலும் எழுந்து அவர்களின் கைகளையும் முகங்களையும் சுட்டது. அவர்கள் இருந்த வீடே பற்றியெரிந்தது."[18] வெடிமருந்துக்கான சீனச் சொல் சீனம்: 火药/火藥; பின்யின்: huŏ yào /xuo yɑʊ/ என்பதாகும். இதன் பொருள் "தீ மருந்து" என்பதாகும்;[19] என்றாலும் இந்தச் சொல் வெடிகலவைகள் கண்டுபிடித்த பிறகு பல நூற்றாண்டுகள் கழிந்த பின்னரே வழக்கில் வந்தது.[20] பிந்தைய நூற்றாண்டுகளில், பொன்ம உருள்கலச் சுடுகலங்கள் கண்டுபிடிக்கும் முன்பே, ஏவுகணை, வெடிகுண்டுகள், நிலத்தடி வெடிகுண்டுகள் போன்ற பல்வேறு வெடிமருந்து ஆயுதங்கள் உருவாகின.[21] மங்கோலிய்ர் யப்பானை முற்றுகையிட்ட காலத்தில் அதாவது 1281 இல் பயன்படுத்திய வெடிகுண்டுகள் யப்பானியக் கடற்கரையோரம் கண்டெடுத்த கப்பற்சிதிலங்களில் கிடைத்துள்ளன.[22]

சீன மொழியில் செங் கோங்லியாங் (Zeng Gongliang) 1040–1044) என்பவரால் எழுதப்பட்ட வூயிங் சாங்யாவோ (Wujing Zongyao) (படைசார் செவ்வியல் நூல்களின் முழுசாரம்) எனும் நூல் பாறைவேதிப் பொருள்களோடு பூண்டும் தேனும் கலந்த பல வெடிகலவைகளிப் பற்றி விவரிக்கிறது. வடிகுழாய் நெறிமுறையைப் பின்பற்றிய மெதுவான தீக்குச்சியாலான தீயெறியும் இயங்கமைப்புகளை வெடிகளுக்கும் தீவாணங்களுக்கும் பயன்படுத்தியமை இந்நூலில் குறிப்பிடப்படுகிறது. வெடிப்பை உருவாக்க இந்நூலில் குறிப்பிடப்படும் வெடிகலவை வாய்பாடுகளில் அவ்வளவாக வெடியுப்பு சேர்க்கப்படவில்லை; 50% அளவுக்கே வெடியுப்பின் பயன் வரம்புபடுத்தப்பட்டுள்ளது; இதுவே தீமூட்டும் கருவியை உருவாக்க போதுமானதாக அமைந்துள்ளது.[8] சாரங்கள் (Essentials) எனும் நூல் சாங் பேரரசு அரசவை சார்ந்த அலுவலரால் எழுதப்பட்டுள்ளது. இது போர்க்கலையில் உடனடி விளைவேதும் செலுத்தியதாகத் தெரியவில்லை. 11 ஆம் நூற்றாண்டில் தாங்குத் மக்களை எதிர்த்து நடந்த போர்கள் பற்றிய கதைகளில் வெடிமருந்து பயன்பாட்டுக்கான விவரிப்பு ஏதும் கிடைக்கவில்லை. இந்நூற்றாண்டில் சீன மிகவும் பெரிதும் அமைதியாகவே இருந்தது.

நடுவண் கிழக்குப் பகுதி

Thumb
15ஆம் நூற்றாண்டு கிரேனடா பேரரசு சார்ந்த சுடுகலனின் ஓவியம், நூல் ஆலிழ்வால் இரிஃபா (Al-izz wal rifa'a).

முசுலீம்கள் 1240 முதல் 1280 வரையிலான காலகட்டத்தில் வெடிமருந்து பற்றிய அறிவைப் பெற்றுள்ளனர். அப்போது சிரிய நாட்டின் காசன் அல்-இராம்மா (Hasan al-Rammah]] வெடிமருந்துக்கான வாய்பாட்டையும் வெடியுப்பைத் தூய்மிக்கும் வழிமுறைகளையும் வெடிமருந்து தீமூட்டும் விவரிப்புகளையும் அரபு மொழியில் எழுதியுள்ளார. இவர் இந்த அறிவைச் சினவில் இருந்து பெற்றதாக இவரது மொழிதல்கள் புலப்படுத்துகின்றன. இவர் வெடியுப்பை சீனப்பனிக்கட்டி என்றும் (அரபி: ثلج الصين thalj al-ṣīn), வெடிபொருள்களை "சீனப்பூக்கள்" என்றும் தீவாணங்களை "சீன அம்புகள்" என்றும் கூறுவதால் வெடிமருந்து பற்றிய அறிவு சினாவில் இருந்து பெற்றது தெளிவாகிறது.[11] மேலும், வெடிமருந்தைத் தனது தந்தையிடம் இருந்தும் தாத்தாவிடம் இருந்தும் பெற்றதாகக் கூறி சிரியாவிலும் எகுபதியிலும் வெடிமருந்து 12 ஆம் நூற்றாண்டின் இறுதியிலோ அல்லது 13 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலோ பயன்படத் தொடங்கிவிட்டதாக வாதிடுகிறார்".[23] பாரசீகத்தில் வெடிமருந்து சீனா உப்பு எனவோ (Persian: نمک چینی) namak-i chīnī)[24][25] அல்லது சீன உப்பளங்களில் இருந்துவந்த உப்பு எனவோ வழங்கியுள்லது.(نمک شوره چینی namak-i shūra-yi chīnī).[26][27]

ஐரோப்பா

Thumb
மிகப் பழைய ஐரோப்பியச் சுடுகலனின் ஓவியம், "De Nobilitatibus Sapientii Et Prudentiis Regum", வால்தேர் தெ மைல்மெத்தே, 1326.
Thumb
Büchsenmeysterei : von Geschoß, Büchsen, Pulver, Salpeter und Feurwergken, 1531
Thumb
தெ லா பைரோடெக்னியா, 1540
Thumb
Deutliche Anweisung zur Feuerwerkerey, 1748

மோகிப் போரில் கி.பி 1241 இல் மங்கோலியர் ஐரோப்பியருக்கு எதிராக சீன வெடிகலன்களையும் வெடிமருந்தையும் பயன்படுத்தியதாக பல தகவல் வாயில்கள் தெரிவிக்கின்றன.[28][29][30] பேராசிரியர் கென்னத் வாரன் சேசு மங்கோலியர் ஐரோப்பாவுக்கு வெடிமருந்தையும் வெடிகல ஆயுதங்களையும் கொண்டுவந்த்தாக்க் கூறுகிறார்.[17] ஆனாலும் வெடிமருந்து வந்த வழித்தடம் பற்றிய விவரம் ஏதும் கிடைக்கவில்லை;[31] மங்கோலியர்கல் வெடிமருந்தைக் கொண்டுவந்தவராக்க் கூறப்பட்டாலும், அவர்கள் சீனாவைத் தவிர வேறு எங்கும் அதைத் தொடர்ந்து பயன்படுத்தியதாகச் சரியான புறநிலைச் சான்றேதும் கிடைக்கவில்லை என்கிறார்."[32]

பிரித்தானியாவும் அயர்லாந்தும்

இந்தியா

இந்தோனேசியா

Remove ads

ஆக்கத் தொழில்நுட்பம்

மிகுந்த திறம்வாய்ந்த வெடித்தூளை உருவாக்க, உணவுத்தூளும் மரத்தூளும் கரித்தூளும் பயன்படுகிறது. இக்கலவை பசிபிக் வில்லோ எனப்படுகிறது.[33] மேலும் ஆல்தர்(alder) அல்லது பக்தோர்ன்(buckthorn) போன்றவையும் பயனில் உள்ளன. பெரும்பிரித்தானியாவில் 15 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளில் கரித்தூளும் ஆல்டர் பக்தார்னும் மிகப் புகழ்வாய்ந்த வெடிமருந்து செய்ய பயன்பட்டுள்ளது; அமெரிக்க மாநிலங்களில் பஞ்சுமரத் தூள் பயனில் இருந்துள்ளது.[34] கலவைப் பொருள்கள் நுண்துகளாக்கப்பட்டு நன்றாக கலக்கிக் கிளறிவிடப்பட்டுள்ளது.

Remove ads

குறிப்புகள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads