வெடிமருந்து சதித்திட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
1605ஆம் ஆண்டு வெடிமருந்து சதித்திட்டம் (Gunpowder Conspiracy) இங்கிலாந்து, இசுக்காட்லாந்து மன்னராட்சிகளின் அரசரான இங்கிலாந்தின் முதலாம் ஜேம்சு மற்றும் இசுக்காட்லாந்தின் ஆறாம் ஜேம்சைக் கொல்ல மேற்கொள்ளப்பட்ட சதியாகும். இது வெடிமருந்து தேசத்துரோகம் (The Powder Treason) எனவும் அழைக்கப்படுகின்றது.[1] கத்தோலிக்க குழுவொன்று நாடாளுமன்றக் கூட்டத்தின் முதல்நாள் நவம்பர் 5, 1605 அன்று இரண்டு அவைகளும் கூடும் வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையை வெடிவைத்துத் தகர்க்கத் திட்டமிட்டனர். இது நிறைவேறியிருந்தால் அரசரும் சீர்திருத்தத் திருச்சபையைச் சேர்ந்த பல பிரபுக்களும் கொல்லப்பட்டிருப்பர்.

சதியாளர்கள் அரசக் குழந்தைகளைக் கடத்தவும் திட்டமிட்டிருந்தனர்.[2] இங்கிலாந்தின் நடுநிலங்களில் பரவலான புரட்சியை முன்னெடுக்கவும் திட்டமிட்டிருந்தனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads