வெட்டுக்கிளி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெட்டுக்கிளி கணுக்காலி தொகுதியைச் சேர்ந்த ஒரு பூச்சியினம் ஆகும். வெட்டுக்கிளிகள் வெளித் தோற்றத்தில் தத்துக்கிளிகள் போலிருக்கும். இதனை தத்துக்கிளிகளிலிருந்து வேறுபிரிப்பதற்காக இது குறுமுனை வெட்டுக்கிளி எனப்படும். வெட்டிக்கிளிகள் பல்வேறு நிறங்களில் உள்ளன. வேளாண்மை செய்யப்படும் பயிர்ச் செடிகளுக்குக் சேதம் விளைவிப்பதால் இது உழவர்களின் எதிரி என்று அறியப்படுகிறது.
Remove ads
உடலமைப்பு

வெட்டுக்கிளிக்குக் கணுக்களாகப் பிரிவுபட்ட மூன்று இணைக் கால்கள் இருக்கின்றன. இவற்றில் பின் இணைக் கால்கள் பிற கால்களை விட நன்கு வளர்ச்சியுடையதாக இருக்கின்றன. இந்தக் கால்கள் நீண்ட, வலிய கால்கள். இவற்றின் உதவியுடன் தரையிலிருந்து எம்பிக் குதித்து நெடுந்தூரம் தாவிக் குதிக்கிறது. வெட்டுக்கிளியின் குறுகிய, விறைப்பான சிறகு மூடிகளுக்குள் விசிறி வடிவாக மடிக்கப்பட்ட அகன்ற சிறகுகள் இருக்கின்றன. முதிர்ச்சியடைந்த பூச்சிகள் நன்றாகப் பறக்கின்றன.
Remove ads
உணவாக
உலகின் சில நாடுகளில் வெட்டுக்கிளிகள் புரதச்சத்து நிறைந்திருப்பதால் உணவாக உட்கொள்ளப்படுகின்றன. எடுத்துக்காட்டாக மெக்சிகோவில் இவை உண்ணப்படுகின்றன.
இந்தியாவில் பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, ஆண்டு மே 2020
27 ஆண்டுகளுக்குப் பின்னர், 2019-இல் ஆப்பிரிக்காவிலிருந்து புறப்பட்ட பாலைவன வெட்டுக்கிளிகள் ஈரான், இந்தியாவுக்குள் வந்த திரளானது ஈரான் மற்றும் பாகிஸ்தானில் இருந்து வந்தது. குசராத்து மற்றும் இராஜஸ்தானில் இவற்றின் பரவல் கடந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்கியது. திசம்பர் மாதத்தில் குசராத்தில் 17,000 எக்டேர் பரப்பளவில் இருந்த, பெரும்பாலும் சீரகப் பயிர்கள் சேதம் அடைந்தன. மேற்கு இராஜஸ்தானின் பகுதிகளில் குறைந்தது 3,50,000 எக்டேர் பரப்பளவில் இருந்த பயிர்கள் இவற்றால் அழிக்கப்பட்டன.[1][2] மே மாதத்தில் இராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் வெட்டுக்கிளி திரள்களால் மோசமாக பாதிப்படைந்தன. இத்திரள்கள் ஒரு கிலோ மீட்டர் அகலம் உடையதாக இருந்தன. இது கடந்த 27 ஆண்டுகளில் நடந்த வெட்டுக்கிளித் தாக்குதல்களில் மிக மோசமானதாகும்.[3][4]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads