வெண்ணிக் குயத்தியார்

சங்ககாலப் புலவர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

வெண்ணிக் குயத்தியார், சங்க காலத்தில் வாழ்ந்த ஒரு தமிழ்ப் பெண் கவி.[1] குயவர் குலத்தைச் சேர்ந்த இவரின் ஒரு பாடல் மட்டும் புறநானுற்றில் 66[2]வது பாடலாக அமைகிறது. இதரப் பாடல்கள் கிடைக்கவில்லை.

வெண்ணி என்பது ஒருவகைப் பூ. இதனை இக்காலத்தில், 'நந்தியாவட்டை' என்பர். இவ்வூரிலுள்ள கரும்பேசுவரர் கோயிலிலுள்ள தலவிருட்சம் வெண்ணி.

புறநானூறு "66" நல்லவனோ அவன்!

  • பாடியவர்: வெண்ணிக் குயத்தியார்: வெண்ணிற் குயத்தியார் எனவும் பாடம்.
  • பாடப்பட்டோன்: சோழன் கரிகாற் பெருவளத்தான்.
  • திணை: வாகை. துறை: அரச வாகை.
நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!
சென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய், நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,
மிகப் புகழ் உலகம் எய்திப்,
புறப்புண் நாணி, வடக் கிருந்தோனே!

வெண்ணி

திருவாரூர் மாவட்ட நீடாமங்கலத்துக்கு மேற்கே உள்ள ஓர் ஊர் வெண்ணி. இது தேவாரப் பாடல் பெற்ற தலம். இக்காலத்தில் கோயில்வெண்ணி என்றும், கோயிலுண்ணி என்றும் வழங்கப்படுகிறது.[3]

கடல் வாணிகம்

வெண்ணிப்பறந்தலைப் போர்

சோழன் கரிகாற் பெருவளத்தான்

வடக்கிருந்தோன்

மேற்கோள்கள்

உசாத்துணைகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads