வாகை

தாவர இனம் From Wikipedia, the free encyclopedia

வாகை
Remove ads

வாகை, Albizia lebbeck என்னும் மரம் தெற்காசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. இம்மரம் பிற வெப்பமண்டல பகுதிகளில் பரவலாகக் காணப்படுகின்றது. இது வாகை இனத்தை சேர்ந்தது.

விரைவான உண்மைகள் வாகை, காப்பு நிலை ...
Remove ads

உடற்பண்புகள்

இது 18 மீ முதல் 30 மீ வரை வளரக் கூடிய மிதமான அல்லது பெரிய வகை மரமாகும். கிளைகள் அகலப்பரந்து ஒரு குடைபோலக் காணப்படும். இது பலத்தண்டுகளையுடையதாகவும் பரந்து வளரக்கூடியதாகவும் உள்ளது. இலைகள் இரட்டைச்சிறகமைப்பையும், அடிக்காம்பு (Rachis) 70-90 மிமி நீளமும், மேற்காம்புகள் (Rachillae) 1 – 5 இணைகளாகவும், 50-70 மிமி நீளமும் காணப்படும். சிற்றிலைகள் 3-11 இணைகளுடனும், நீள்வட்டம் மற்றும் முட்டைப் போன்ற வடிவிலும்,சமச்சீரற்ற நிலையிலும் காணப்படும். இலை தொடக்கத்தில் கரும்பச்சையிலும் இரவு நேரங்களில் மூடிக்கொள்ளும் பண்புடையதாகவும், முதிர்ந்த நிலையில் பழுப்பு நிறத்திலும் காம்புகளுடன் இறுகிய அமைப்பிலும் காணப்படும். இளமஞ்சள்/வெண்நிறம் உடைய கொத்தான மகரந்தத் தாள்களை உள்ளடக்கிய மணமிக்க பூக்களையும், தட்டையான காய்களையும் உடையது.[1]

Remove ads

இலக்கியம்

சங்ககாலத்தில் போரில் வெற்றிபெறும் வீரர்களுக்கு வாகை மலர் சூட்டப்பட்டு வெற்றிக் களிப்பை பகிர்ந்ததாக தமிழ் இலக்கியங்களில் குறிப்புகள் உள்ளன. "வெற்றி வாகை சூடினான்" எனும் தொடர் இன்னமும் வழக்கிலுள்ளது. வாகை என்பதை தூங்கமூஞ்சி மரத்துடன் தற்காலத்தில் தவறுதலாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

சிறப்புகள்

  • வாகை மலர்ச்சூடுதல் வெற்றிக்களிப்பை உணர்த்தும்.
  • வீக்கம், கொப்புளம் வடிதலுக்கு மருந்தாகப் பயன்படுத்தப் படுகிறது.
  • இருமல், நுரையிரல் அழற்சி, ஈறழற்சி ஆகியவற்றிற்கு இவை மருந்தாகப் பயன்படுத்தப் பட்டுள்ளது. குறிப்பாக இம்மரப்பட்டையை அழற்சிக்கு மருந்தாகப் பயன்படுத்துகின்றனர்.
  • இதன் இலை, பூ, பட்டை, பிசின், வேர், விதை ஆகியன மருத்துவப் பயனுடையனவாக கருதப்படுகின்றது.[2]வாகை வேர் சித்தமருத்துவத்தில் கூறப்பட்டுள்ள பெரும்பஞ்ச மூலங்களுள் ஒன்று.
  • தமிழீழத்தின் தேசிய மரமாகும்.
  • செக்குகள் செய்ய வாகை மரத்தினைப் பிரயோகிக்கப்படுகிறதுபக்க உரை.[3]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads