வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், நாமக்கல் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் (ஆங்கிலம்:Vennandur block), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் இராசிபுரம் வட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியம் ஆகும். இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் வெண்ணந்தூரில் உள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தில் 24 கிராம ஊராட்சிகள் உள்ளது.[3]
Remove ads
நிலவியல்
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியம் 11,5206 ° வடக்கு, 78,0872 ° கிழக்கில் அமைந்துள்ளது. இது 218 மீட்டர் ( 726 அடி) உயரத்தில் உள்ளது. வெண்ணந்தூர்-ஏரி வெண்ணந்தூருக்கு அருகில் மேற்கே அமைந்துள்ளது. வெண்ணந்தூர் அருகில் அலவாய்மலை உள்ளது இது கிழக்கு தொடர்ச்சி மலை பகுதியாகும். திருமணிமுத்தாறு அருகில் உள்ள ஆறு. இது ஏற்காடு மலையில் இருந்து ஆரம்பமாகிறது. மாவட்ட தலைநகர் நாமக்கல் வெண்ணந்தூரில் இருந்து 39 கி.மீ.. தொலைவில் அமைந்துள்ளது.மாநில தலைநகர் சென்னை வெண்ணந்தூரில் இருந்து 370 கி.மீ.. தொலைவில் அமைந்துள்ளது.
ஊராட்சி மன்றங்கள்
வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள இருபத்தி நாலு ஊராட்சி மன்றங்களின் விவரம்:
- தொட்டியவலசு
- தொட்டியப்பட்டி
- தேங்கல்பாளையம்
- செம்மாண்டப்பட்டி
- ஆர். புதுப்பாளையம்
- பொன்பரப்பிப்பட்டி
- பல்லவநாய்க்கன்பட்டி
- பழந்தின்னிப்பட்டி
- ஓ. சௌதாபுரம்
- நெம்பர் 3 கொமாரபாளையம்
- நடுப்பட்டி
- நாச்சிப்பட்டி
- மூளக்காடு
- மின்னக்கல்
- மாட்டுவேலம்பட்டி
- மதியம்பட்டி
- குட்டலாடம்பட்டி
- கீழூர்
- கட்டநாச்சம்பட்டி
- கல்லாங்குளம்
- அனந்தகவுண்டம்பாளையம்
- அலவாய்ப்பட்டி
- ஆலாம்பட்டி
- அக்கரைப்பட்டி
Remove ads
மக்கள் வகைப்பாடு
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 62,045 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 32,107 ஆண்கள், 29,938 பெண்கள் ஆவார்கள்.
வெளி இணைப்புகள்
- நாமக்கல் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களின் வரைபடம் பரணிடப்பட்டது 2015-07-08 at the வந்தவழி இயந்திரம்
இதனையும் காண்க
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads