வெளிநேரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இயற்பியலில், வெளிநேரம் (spacetime) என்பது, வெளி மற்றும் நேரம் என்பவற்றை ஒரே கட்டமைப்புக்குள் கொண்டுவரும் ஒரு கணித மாதிரி ஆகும். இது வெளி-நேரத் தொடரியம் எனப்படுகின்றது. வெளிநேரம் என்பதில் வெளி (space) மூன்று பரிமாணங்களைக் கொண்டது. நேரம் இவற்றுடன் நான்காவது பரிமாணம் ஆகின்றது.

இயூக்கிளிட்டின் வெளி பற்றிய நோக்கின்படி, அண்டம் மூன்று பரிமாணங்கள் உடைய வெளியையும், ஒரு பரிமாண நேரத்தையும் கொண்டது. இவ்விரண்டையும் ஒன்றாக்கிய போது, இயற்பியலாளர்கள் பெருமளவு இயற்பியல் கோட்பாடுகளை எளிமைப் படுத்தியதுடன், அண்டத்தின் செயற்பாடு பற்றியும் சீரான முறையில் விளக்க முடிந்தது.
மரபார்ந்த விசையியலை பொறுத்தவரையில் வெளிநேர கணித மாதிரியை விட இயூக்கிளிட்டின் வெளியின் பாவனை பொருத்தமானது, ஏனெனில், இயூக்கிளிட்டின் வெளியானது நேரத்தை, அதன் நோக்குனரின் இயக்க நிலைக்கு சார்பில்லாமல், எல்லாவற்றிற்கும் பொருத்தமானதாகவும்(universal), ஒரு மாறிலியாகவும் கருதுகின்றது.
Remove ads
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads