வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
"வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்" என்ற பாடலானது 1992ம் ஆண்டு விடுதலைப் புலிகளின் கலைபண்பாட்டுக் கழகத்தினரால் வெளிவந்த "நெய்தல்" என்னும் பாடல் தொகுப்பில் இடம்பெற்ற பாடலாகும். புதுவை இரத்தினதுரை எழுதிய இப்பாடலுக்கு இசைவாணர் கண்ணனின் இசையில் எஸ். ஜி. சாந்தன், சிட்டு மற்றும் பின்னணியில் மேளின் வேஜினி ஆகியோர் பாடியவர்கள்.[1][2][3][4] இப்பாடலானது நெய்தல் நில மக்களின் அவலவாழ்வையும் கடற்புலிகளின் வீரத்தையும் வெளிப்படுத்தி நிற்கின்றது. இப்பாடல் நாட்டார் இசை வடிவத்தில் அமையப்பெற்றுள்ளது.[5]
Remove ads
முழுப் பாடல்
பல்லவி
வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம் - கடல்
வீசுகின்ற காற்றில் உப்பின் ஈரம்
தள்ளிவலை ஏற்றிவள்ளம் போகும் - மீன்
அள்ளிவர நீண்ட நேரம் ஆகும்.
அனுபல்லவி
எங்கள் துயர் தெரியாது
என்னவென்று புரியாது
இங்கிருந்து பாடுகின்ற
எங்கள் குரல் கேட்காது
சரணம்
ஊருறங்கும் சாமத்திலே யாருமற்ற நேரத்திலே
காரிருட்டில் படகெடுத்துப் போவோம் - நேவி
கண்டுவிட்டால் கடலில் நாங்கள் சாவோம்.
- பேருமின்றி ஊருமின்றி பெற்றவளின் முத்தமின்றி
- ஈரவுடல் கரையொதுங்கும் காலை - புலி
- இந்தநிலை மாற்றிடுவான் நாளை
பாயிறக்கிக் கரையினிலே பாதம்படும் வரையினிலே
பார்த்தவிழி பூத்திருப்பாள் மனைவி - என்னை
பார்த்தபின்பே சோற்றை உண்பாள் துணைவி
- வாயிறுக்கி வயிறிறுக்கி வாழும்கடல் மீனவனின்
- வாசலெங்கும் வேதனையின் கோடு - நாளை
- வந்துவிடும் எங்கள்திரு நாடு
அப்பன்வலை வீசிவீசி அள்ளிவந்த செல்வமெல்லாம்
அன்னியனின் காலிற்சென்று விழுமோ - புலி
ஆளுகின்ற காலம்நாளை வருமோ
- தக்கதொரு தலைவனுண்டு தளபதிகள் வீரருண்டு
- தங்கத் தமிழீழம் வரும் நாளை - அலை
- தாவிக் கடற்புலிகள் வெல்லும் வேளை
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads