சிட்டு (விடுதலைப் புலி உறுப்பினர்)

From Wikipedia, the free encyclopedia

சிட்டு (விடுதலைப் புலி உறுப்பினர்)
Remove ads

மேஜர் சிட்டு (4 நவம்பர் 1971 – 1 ஆகத்து 1997) விடுதலைப் புலிகளின் இசைக் கலைஞர். போராளி.

விரைவான உண்மைகள் மேஜர் சிட்டு, பிறப்பு ...

வாழ்க்கைக் குறிப்பு

இவர் இலங்கை, யாழ்ப்பாண மாவட்டம், வடமராட்சி கிழக்கு, மருதங்கேணி என்ற ஊரைப் பிறப்பிடமாகக் கொண்டவர். மெல்லிசைப் பாடகர் கே. எஸ். பாலச்சந்திரனின் இளைய சகோதரன். இவர் அண்ணாவியார் பரம்பரையைச் சேர்ந்தவர். இவரது தந்தையார் கோவில் பூசகராகவும் நாடகக்கூத்துக் கலைஞராகவும் இருந்தார். ஆகவே, சிட்டுவுக்கும் இவரது சகோதரர்களுக்கும் இசை இயல்பாகவே வந்தது.

இவர் யாழ். மாவட்ட கலை பண்பாட்டுக் கழகப் பொறுப்பாளராகவும் பின்னர் புலிகளின் குரல் வானொலியின் பொறுப்பாளராகவும் இருந்தார்.[1][2]

தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த 'கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்' என்ற பாடல் இவர் முதலில் பெயர் பெறக் காரணமாக அமைந்தது. இப்பாடலை மேஜர் செங்கதிர் எழுதியிருந்தார்.[3] தொடர்ந்த காலங்களில் கேணல் கிட்டுவின் நினைவாக அவசரமாக உருவாக்கப்பட்டு, இரு நாட்களுள் வெளிவந்த பாடலான 'கடலம்மா.. எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா' என்ற பாடல் மூலம் இவர் பிரபலமானார். குரல் வளத்தினால் புகழ்பெற்றார். தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட 'உயிர்ப்பூ' திரைப்படத்தில் இடம்பெற்ற 'சின்னச் சின்னக் கண்ணில் வந்து மின்னல் விளையாடிடும்' என்ற பாடலும் இவருக்குப் புகழ் பெற்றுத் தந்தது. இவர் 'கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்' பாடலில் தொடங்கி 'சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்' பாடல்கள் வரை 75 பாடல்களைப் பாடியுள்ளார்.

1997 ஆகத்து 1 இல் ஜெயசிக்குறு படை நடவடிக்கைக்கு எதிராக ஓமந்தைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது மேற்கொள்ளப்பட்ட ஊடறுப்புத் தாக்குதலில் வீர்ச்சாவடைந்தார்.[4][5][6] இவரது வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் விதைக்கப்பட்டது.

Remove ads

இவர் பாடிய பாடல்களில் சில

  1. மாவீரர் துயிலுமில்லப் பாடல்
  2. கண்ணீரில் காவியங்கள் செந்நீரில் ஓவியங்கள்
  3. விழியில் சொரியும் அருவிகள்
  4. இனத்தின் அடிமை இருளை அகற்ற[7]
  5. வெள்ளிநிலா விளக்கேற்றும் நேரம்
  6. வருவாய் வருவாய் என நாம் இருந்தோம்
  7. வருக எங்கள் மக்களே
  8. உருவேதும் தெரியாது கருவேங்கை பாயும்
  9. உன்னத விடுதலை உச்சங்களே
  10. தளராத துணிவோடு களமாடினாய்
  11. சோலையிலே பாடும் செஞ்சோலையிலே பாடும்
  12. மூசுமலை பேசவில்லையோ
  13. புலியொரு காலமும் பணியாது
  14. ஓட்டிகளே படகோட்டிகளே
  15. பகை விளையாடிடும் கடலினில் ஏறிய
  16. கடலம்மா… எங்களுக்கு நீதி சொல்ல எவருமில்லையா
  17. சாவினைத் தோள்மீது
  18. நீலக்கடலேறி வந்து மேனிதொடும் காற்று
  19. வெற்றிபெற்றுத் தந்துவிட்டு நீருறங்குகின்றீர்
  20. கடலின் அலை வந்து
  21. விடியும் நேரம் பகைவன் தேசம் உறங்கிக் கிடந்தது
  22. சின்னச் சின்னக் கண்ணில்[8]
  23. அலை தாவியே
  24. எங்கே எங்கே வேங்கைகள் எங்கே
  25. நிறைகுடத்தை ஏந்திக்கொண்டு
  26. அங்கயற்கண்ணிக்கு ஆயிரம் ஆயிரம் அக்கினி தீபங்கள் ஏற்று
  27. வாழ்த்துங்கள் நெஞ்சங்களே
  28. குருதி சொரிந்து கடலின் உடலும்
  29. ரங்கா ரங்கா புலி தூங்காதடா
  30. குணியாது கடல்வேங்கை
  31. நிலவும் வானும் கடலும்
  32. அலைபாடும் இசையோசை கேட்கலையா
  33. அமுத மழையில் நனையும் பொழுதில்
  34. இதயக்கோவில் அழைக்குது
  35. கரிகாலன் படையிது
  36. ஒருதரம் விழிகளில் நெருப்பினை மூட்டு
  37. வாழ்க வாழ்க வாழ்க ஒளிவீச்சு[9]
  38. விழிகள் கரைய உருகி உருகி
  39. சங்கு முழங்கடா தமிழா
  40. கடலில் எழுதிடும் சரிதங்கள்
  41. விழிகளை மூடிக் குழிகளில் உறங்கும் வீரக்குழந்தைகளே
  42. விடியும் திசையில் பயணம் பயணம்
  43. சிறகு முளைத்து உறவை நினைத்துப் பறக்கும் குருவிகள்
  44. எழுவான் திசையில் கதிரோன் எழுவான்[10]

இவற்றுள் சில.

Remove ads

இவற்றையும் பார்க்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads