வேங்கி
ஆந்திர வரலாற்றுக்கால நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வேங்கி (அல்லது வேங்கி நாடு) என்பது ஆந்திரத்தின் கோதாவரி மற்றும் கிருஷ்ணா மாவட்டங்களில் பரவி இருந்த ஓர் ஆட்சிப் பகுதியாகும்.[1][2] எருலுவுக்கு அருகில் உள்ள பெதவேகி இதன் தலைநகரம் ஆகும். கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசின் மன்னர் அசோகர் கைப்பற்றும்வரை இப்பகுதி கலிங்க நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. கி.மு 185 க்கு பிறகு, இப்பகுதியில் சாதவாகனர்கள் தங்கள் ஆதிக்கத்தை ஏற்படுத்தி, வேங்கியைக் கைப்பற்றினர். பிறகு இவர்களை வெற்றிகொண்டு ஆந்திர இசுவாகு மரபினர் வேங்கியத் தங்கள் வசம் கொண்டுவந்தனர். கி.பி. 300 காலகட்டத்தில் இப்பகுதியின் ஆட்சியாளர்களாக சாலங்காயனார்கள் ஆயினர். இவர்கள் பல்லவர்களுக்கு கீழ் இருந்தனர். சாலங்காயனார்களை விஷ்ணு குந்தினர்கள் வெற்றி கொண்டனர்.
ஏழாம் நூற்றாண்டின் துவக்கத்தில், விஷ்ணு குந்தினர்களிடமிருந்து சாளுக்கிய இரண்டாம் புலிகேசி வேங்கியை கைப்பற்றித் தன் தம்பி குப்ஜ விஷ்ணுவர்தனின் கட்டுப்பாட்டில் விட்டான். விஷ்ணுவர்தன் வழியாகவே கீழைச் சாளுக்கியர் மரபு துவங்கியது. கீழைச் சாளுக்கியர்கள் முதலில் இராஜராஜ சோழனால் (985-1014) வெற்றி கொள்ளப்பட்டனர். என்றாலும் பின்னர் கீழைச் சாளுக்கியர் சோழரின் நெருங்கிய கூட்டாளிகளாக ஆயினர். மேலும் இவர்களுக்குள் திருமண உறவுகளும் ஏற்பட்டன. இதனால் மேலைச் சாளுக்கியரின் தலையீடுகள் தொல்லைகளைச் சந்திக்க வேண்டிஇருந்தது. வேங்கியைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்க சோழன் சோழர் அரியணையில் அமர்ந்தார்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads