சாதவாகனர்

From Wikipedia, the free encyclopedia

சாதவாகனர்
Remove ads

சாதவாகனர் (Sātavāhanas) என்போர் தக்காணப் பகுதியில் நிலைகொண்டிருந்த பண்டைய இந்திய அரச மரபினராவர். புராணங்களில் இவர்கள் ஆந்திரர் எனவும் அழைக்கப்பட்டனர். சாதவாகன ஆட்சி பொ.ஊ.மு. 1-ஆம் நூற்றாண்டு முதல் பொ.ஊ. 2-ஆம் நூற்றாண்டு வரை இருந்ததாக இன்றைய வரலாற்றாளர்கள் நம்புகின்றனர். வேறு சிலர் பொ.ஊ.மு. 3-ஆம் நூற்றாண்டு காலம் முதலே இவர்கள் ஆட்சி புரிந்ததாகக் கூறுகின்றனர். சாதவாகன இராச்சியம் இன்றைய தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. பல்வேறு காலகட்டங்களில் இவர்கள் இன்றைய குசராத்து, மத்தியப் பிரதேசம், கருநாடகம் ஆகிய பகுதிகளையும் ஆண்டனர். இவ்வம்சத்தின் தலைநகராக பிரதித்தானா மற்றும் அமராவதி ஆகிய நகரங்கள் இருந்துள்ளன.

விரைவான உண்மைகள் சாதவாகனப் பேரரசு(ஆந்திராக்கள்), தலைநகரம் ...

இவ்வம்சத்தின் மூலம் அறியப்படாவிடினும், புராணங்களின் படி, இவர்களது முதலாவது மன்னர் கண்ணுவ குலத்தை தோற்கடித்துள்ளார். மௌரியர்களுக்குப் பின்னரான காலத்தில், தக்காணப் பகுதியில் சாதவாகனர் வெளியுலகத் தாக்குதல்களை முறியடித்து அமைதியை நிலைநாட்டினர். குறிப்பாக சகர்கள் மேற்கு சத்ரபதிகள் ஆகியோருடனான சமர்கள் நீண்ட காலம் தொடர்ந்திருந்தன. சாதவாகனர் கௌதமிபுத்ர சதகர்ணியின் ஆட்சிக் காலத்திலும், அவர்களுக்குப் பின் வந்த வசித்திபுத்திர புலாமவியின் காலத்திலும் தமது உச்ச நிலையை எட்டியிருந்தனர். பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டில் இவர்கள் சிறிய மாநிலங்களாக சிதறிப் போயினர்.[7]

சாதவாகனர் ஆட்சியில் தமது உலோக நாணயங்களில் ஆட்சியாளர்களின் உருவங்களைப் பொறித்தவர்களில் முதன்மையானவர்கள் ஆவர். இவர்கள் சிந்து-கங்கைச் சமவெளி முதல் இந்தியாவின் தென்முனை வரை கலாச்சாரப் பாலங்களை அமைத்தனர், அவர்களுடனான வணிகத்தில் முக்கிய பங்காற்றினர். பிராமணம் மட்டுமல்லாது, பௌத்தத்தையும் பிராகிருத இலக்கியத்தையும் ஆதரித்து வந்தனர்.

Remove ads

தோற்றம்

சாதவாகனர்களின் மூலம், மற்றும் ஆண்டு பற்றிய தகவல்கள், பெயர்க்காரணம் ஆகியவை குறித்து இன்றைய வரலாற்றாளர்கள் தமக்கிடையே முரண்படுகின்றனர். பிராந்திய அரசியல் காரணமாக இன்றைய ஆந்திரப் பிரதேசம், மகாராட்டிரம், கருநாடகம், தெலுங்கானா ஆகியன சாதவாகனர்களின் தாய்நாடுகள் என கூறுகின்றமையும் விவாதத்துக்குரியன.[8]

சாதவாகனர் பற்றிய முதலாவது குறிப்பு கி.மு. 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகின்ற ஐதரேய பிராமணத்தில் காணப்படுகின்றது. இவர்கள் விசுவாமித்திரரின் வழி வந்தவர்கள் என இப் பிராமணம் கூறுகின்றது. புராணங்களும், இவர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் இவர்களை சாதவாகனர், சதகர்ணிகள், ஆந்திரர், ஆந்திரபிரித்தியர் எனப் பல்வேறு பெயர்களால் குறிப்பிடுகின்றன. கிரேக்கப் பயணியான மெகஸ்தெனசின் ஒரு குறிப்பின்படி இவர்கள் 100,000 காலாட்படையும், 1,000 யானைகளும், 30 சிறப்பாக அமைக்கப்பட்டு அரண் செய்யப்பட்ட நகரங்களும் இருந்ததாகத் தெரிகிறது.

Remove ads

சாதவாகன ஆட்சியாளர்கள்

சாதவாகனர்கள் குறித்த தொல்லியல் குறிப்புகள் மற்றும் வெளியிட்ட நாணயங்களின் அடிப்படையில் ஹிமன்சு பிரபா ராய் என்பவர் சாதவாக ஆட்சியாளர்களை கீழ்கண்டவாறு குறித்துள்ளார்.[9]

  1. சிமுகன் - பொ.ஊ.மு. 100-70
  2. கண்கன் - பொ.ஊ.மு. 70-60
  3. முதலாம் சதகர்ணி- பொ.ஊ.மு. 70-60
  4. இரண்டாம் சதகர்ணி - பொ.ஊ.மு. 50-25
  5. சிவசுவதி - பொ.ஊ. 1ம் நூற்றாண்டு
  6. கௌதமிபுத்ர சதகர்ணி - பொ.ஊ. 86–110
  7. வசஸ்திபுத்திர ஸ்ரீ புலமாவி (பொ.ஊ. 110–138 )
  8. வசஸ்திபுத்திர சதகர்ணி (பொ.ஊ. 138–145)
  9. சிவ ஸ்ரீ புலமாவி (பொ.ஊ. 145–152)
  10. சிவஸ்கந்த சதகர்ணி (பொ.ஊ. 145–152)
  11. யக்ஞ ஸ்ரீ சதகர்ணி (பொ.ஊ. 152–181)
  12. விஜய சதகர்ணி
  • சாதவாகன இராச்சியத்தின் தென்கிழக்கு தக்காணப் பிரதேச ஆட்சியாளர்கள்:[10]
  1. சந்திர ஸ்ரீ
  2. இரண்டாம் புலுமாவி
  3. ஆபிர ஈசாசேனா
  4. மாத்ரிபுத்திர சகாசேனா
  5. ஹரிபுத்திர சதகர்ணி
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads