வேம்பார்

தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

வேம்பார் (Vembar) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் வட்டம், வேம்பார் குறுவட்டத்தில் உள்ள ஒரு வருவாய் கிராமம் ஆகும்.[1] மேலும் இது விளாத்திக்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்த ஒரு கிராம ஊராட்சி ஆகும். வேம்பார் கிழக்கு கடற்கரைச் சாலையில் தூத்துக்குடியின் வட எல்லையில் அமைந்துள்ளது. இங்கு வேம்பார் மற்றும் வேம்பார் தெற்கு என இரண்டு ஊராட்சிகள் உள்ளன.

விரைவான உண்மைகள் வேம்பார் வேம்பாரு, நாடு ...

வேம்பார், தூத்துக்குடி மாவட்ட எல்லையில், இராமநாதபுர மாவட்டத்தின் எல்லைக்கு அருகே சாயல்குடியிலிருந்து 13 கிலோ மீட்டர் தொலைவிலும், மேல்மந்தையிலிருந்து 7 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மதுரையானது 97 கிலோ மீட்டர் தொலைவில் வடமேற்கிலும், திருநெல்வேலியானது 85 கிலோ மீட்டர் மேற்கிலும் அமைந்துள்ளது.

பாஞ்சலங்குறிச்சி, எட்டயபுரம், மன்னார் வளைகுடா உயிர்க்கோள ரிசர்வ், குருசடை தீவுகள், பாம்பன் பாலம் மற்றும் தனுஷ்கோடி முதலிய சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை வேம்பாரில் தங்கிப் பார்வையிடலாம். வேம்பாரின் அருகிலுள்ள விமான நிலையம் தூத்துக்குடியில் உள்ளது. இராமநாதபுரம் ரயில் நிலையம், கோவில்பட்டி மற்றும் தூத்துக்குடி ரயில் நிலையங்களை வேம்பார் மக்கள் பயன்படுத்துகின்றனர்.

மீன்பிடித்தல் மற்றும் பனைமரம் ஏறுதல் முக்கிய வருமான ஆதாரமாகும்.

Remove ads

நிலவியல்

Thumb
வேம்பார் மீன்பிடி இறங்குதளம்

அருகிலுள்ள நகரங்களிலிருந்து தூரம்: விளாத்திகுளம் : 22 கி.மீ. தூத்துக்குடி: 45 கி.மீ. மதுரை : 97 கி.மீ.

சிறப்புகள்

Thumb
வேம்பார் கடற்கரை

வேம்பார் அழகிய கிராமமாகும். இங்கு அழகான கடற்கரையும் கலங்கரை விளக்கமும் அமைந்துள்ளன. பெரும்பாலன மக்கள் இங்கு மீன்பிடி தொழிலைச் செய்கின்றனர். இம்மக்களின் சிறப்பு ஒற்றுமையே ஆகும். வேம்பாரிலிருந்து சென்னைக்கு நேரடி தினசர் சொகுசு பேருந்து சேவை உள்ளது. இங்குள்ள பழமையான தூய ஹோஸ்ட் தேவாலயத்தில் ஜனவரி மாதம் நடைபெறும் பண்டிகையில் உலகம் முழுவதும் இருந்து சுமார் 10000 கத்தோலிக்கர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த தேவாலயத்தினை பரவர் குலத்தவர் பரம்பரையாக சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக நிர்வாகம் செய்கின்றனர்.

இங்குக் காணப்படும் மற்றுமொரு முக்கியமான தேவாலயம் தூய அந்தோணியார் தேவாலயமாகும். 1542ல் இப்பகுதி வழியாகப் பயணம் செய்த கத்தோலிக்க மத போதகர் பிரான்சிஸ் சேவியர் இப்பகுதி மக்களைத் தேவாலயம் கட்ட வைத்த வேண்டுகோளின் அடிப்படையில் கடற்கரைப் பகுதிகளில் கட்டப்பட்ட 40 தேவாலயங்களில் இதுவும் ஒன்றாகும். 1600ல் இப்பகுதிகளில் கட்டப்பட்ட தேவாலயங்களில் பெரியதும் அழகானதுமாக இது கருதப்படுகிறது.

1658ல் டச்சு நாட்டினர் போர்த்துக்கீசியர்களிடமிருந்து இப்பகுதியினை கைப்பற்றி கடற்கரைப் பகுதியில் உள்ள தேவாலயங்களைச் சேதப்படுத்தினர். வேம்பார் தேவாலயம் ஆயுதக் கிடங்காகப் பயன்படுத்தப்பட்டது. வேம்பார் மக்கள் டச்சு நாட்டினருடன் வணிக ரீதியாக ஒத்துழைக்காததால், டச்சு நாட்டினரின் வணிகம் பாதிக்கப்பட்டது. எனவே 1699ல் டச்சுக்காரர்கள் பரதர் மக்களை அழைத்து எவ்வித பயமும் இன்றி அவர்கள் கத்தோலிக்க மதத்தினைப் பின்பற்றலாம் என அறிவித்தனர். 1720ல் தூய ஆவி தேவாலயம் கட்டப்பட்டது.

இங்கே CSI தூத்துக்குடி - நாசரேத் திருமண்டலம், வேம்பார் சேகரத்தின் தலைமை ஆலயமாக செயல்பட்டு வரும் தூய தோமாவின் ஆலயம் 1929ம் ஆண்டிலிருந்து செயலாற்றி வருகிறது.

இப்பகுதியில் வேம்பார் அய்யனார் கோயில் மிகவும் பிரபலமானது. இது இந்துக்கள் வழிபடும் கோயிலாகும். இந்த அய்யனார் வீரையா பெருமாள் அய்யனார் என அழைக்கப்படுகிறார். இது மிகவும் பழமையான கோயிலாகும். இந்த அய்யனார் இப்பகுதியினை காப்பவராக அறியப்படுகிறார்.

Remove ads

கல்வி

கல்லூரி

  • தேவனேசம் இருதய அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி

பள்ளிகள்

  • தூய செபசுதியன் நடுநிலைப் பள்ளி
  • தூய பீட்டர் நடுநிலைப் பள்ளி
  • அரசு உயர் நிலைப் பள்ளி (விளாத்திக்குளம் வட்டத்தில் சிறந்த அரசுப் பள்ளி, பொதுத் தேர்வில் அதிக மாணவர்கள் தேர்ச்சிப்பெற்றப் பள்ளி).
  • புனித மேரி மெட்ரிக்குலேசன் பள்ளி
  • சிந்தியா மெட்ரிக்குலேசன் பள்ளி
  • இந்து நாடார் ஆரம்பப் பள்ளி
  • TNDTA ஆரம்ப பாடசாலை

கோயில்கள்

  • புனித கோஸ்ட் தேவாலயம் (வடக்கு)
  • புனித செபாஸ்தியனின் க்ரோட்டோ (வடக்கு)
  • தூய அந்தோணியார் தேவாலயம் (வடக்கு)
  • புனித பீட்டர் தேவாலயம் (தெற்கு)
  • தூய அந்தோணியார் தேவாலயம் (தெற்கு)
  • வீரைய பெருமாள் ஐயனார் கோயில் :
  • வீரையா காரியம்மன் கோவில் :
  • சி.எஸ்.ஐ தூய தோமாவின் ஆலயம்
  • தேவ சபை- கடவுளின் தேவாலயம் (இராமேஸ்வரம் சாலை)
  • அய்யனார் கோவில்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads