வர்ஜீனியா
ஐக்கிய அமெரிக்க நாடுகளின் ஒரு மாநிலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வர்ஜீனியா (வர்சீனியா) (Virginia, வர்ஜீனியா காமன்வெல்த் அல்லது பொதுநலவாய வர்ஜீனியா) ஐக்கிய அமெரிக்க மாநிலங்களுள் ஒன்றாகும். ஐக்கிய அமெரிக்காவின் கிழக்கு கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ளது. இதற்கு 'ஓல்டு டொமினியன்' என்ற பட்டப்பெயரும் உண்டு. எட்டு அமெரிக்க அதிபர்கள் இம்மாநிலத்தில் பிறந்தவர்களாதலால், இது அமெரிக்க அதிபர்களின் தாய் எனவும் அழைக்கப்படுகிறது. இதன் புவியியலும் காலநிலையும் புளு ரிட்ஜ் மலை மற்றும் செசுபிக் விரிகுடாவால் நிர்ணயிக்கப்படுகின்றன. இதன் தலைநகரம் ரிச்மன்ட்; அதிக மக்கள் தொகை உடைய நகரான வர்ஜீனியா கடற்கரையும் அதிக மக்கள் தொகை உடைய கவுண்டியான பேர்வேக்சு கவுண்டியும் முக்கிய அரசியல் பிரிவாகும். வர்ஜீனியாவின் மக்கள் தொகை எண்பது லட்சத்துக்கும் அதிகமாகும். ஐக்கிய அமெரிக்காவில் 10 ஆவது மாநிலமாக 1788 இல் இணைந்தது,
அமெரிக்க உள்நாட்டுப்போரில் இம்மாநிலம் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் (தெற்கு மாநிலங்கள்) ஒன்றாக இருந்தது; ரிச்மன்ட் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு அணியின் தலைநகராக விளங்கியது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads