வேல்சு கால்பந்துச் சங்கம்

From Wikipedia, the free encyclopedia

வேல்சு கால்பந்துச் சங்கம்
Remove ads

வேல்சு கால்பந்துச் சங்கம் (Football Association of Wales, வேல்சு: Cymdeithas Bêl-droed Cymru, எஃப்ஏடபிள்யூ (FAW)), வேல்ஸ் நாட்டில் காற்பந்தாட்டத்தை நிர்வகிக்கும் மேலாண்மை அமைப்பாகும். இச்சங்கம் ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் ஒன்றியம், பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரியம் ஆகியவற்றில் உறுப்பினராக உள்ளது.

விரைவான உண்மைகள் யூஈஎஃப்ஏ, தோற்றம் ...

1876-ஆம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இச்சங்கம், உலகிலேயே மூன்றாவது மிகப் பழைய கால்பந்துச் சங்கம் ஆகும்.[1] உலகளவில் காற்பந்தாட்ட விதிமுறைகளை நிர்ணயிக்கும் பன்னாட்டுக் கால்பந்துச் சங்க வாரிய உறுப்பினராக இருக்கும் நான்கு தேசிய கால்பந்துச் சங்கங்களில் ஒன்றாகும்; மற்றவை, (இங்கிலாந்து) கால்பந்துச் சங்கம், இசுக்கொட்லாந்து கால்பந்துச் சங்கம், அயர்லாந்து கால்பந்துச் சங்கம் மற்றும் ஃபிஃபா.[2] இந்த நான்கு நாடுகளும் ஐக்கிய இராச்சியத்தின் உறுப்பு நாடுகளாகும்.

வேல்சு தேசிய காற்பந்து அணியைத் தேர்ந்தெடுத்து நிர்வகிப்பது இச்சங்கத்தின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும்.

Remove ads

குறிப்புதவிகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads