வேளச்சேரி

சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

வேளச்சேரிmap
Remove ads

வேளச்சேரி (Velachery), சென்னையில் உள்ள வேகமாக வளர்ந்து வரும் ஒரு குடியிருப்புப் பகுதி ஆகும். இதன் முக்கியச் சாலைகள் கிண்டி, அண்ணா சாலை, மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியால் வளர்ந்து வரும் தென் சென்னைப் புறநகர்ப் பகுதிகளை இணைக்கின்றன.

விரைவான உண்மைகள்
Remove ads

சொற்பிறப்பியல்

வேளாளர்கள் ( வேளர்-விவசாயிகள் ) அல்லது வேளிர் [4]( சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள்) வாழ்ந்த இடமே வேளச்சேரி என்று அழைக்கப்பட்டது.

வரலாறு

சங்க காலம்

வேளச்சேரி என்னும் இந்த ஊர் ஒன்பதாவது நூற்றாண்டுக்கும் முந்தையது. இவ்வூர் தொண்டை மண்டலத்தின் வரலாற்று சிறப்புமிக்கது என பல்வேறு கல்வெட்டுக்கள் உறுதிப்படுத்துகின்றன. இங்குள்ள செல்லியம்மன் ஆலயத்தில் சென்னை செல்லியம்மன் கோயில்இச்சிறப்புமிக்க கல்வெட்டுகள் அமையப்பெற்றுள்ளது. பரகேசரிவர்மன்தென்னிந்திய_கல்வெட்டுகள் / முதலாம் பராந்தக சோழன்முதலாம்_பராந்தக_சோழன் ஆளுமைக்கு உட்பட்ட பகுதியாக இக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.


Remove ads

போக்குவரத்து[5]

Thumb
வேளச்சேரியில் உள்ள பறக்கும் ரயில் நிலையம்

வேளச்சேரி சென்னையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து வசதி கொண்ட ஒரு இடம் ஆகும். வேளச்சேரி விசயநகரப் பேருந்து நிலையத்திலிருத்து பாரிமுனை, திருப்பெரும்புதூர், செங்கற்பட்டு, தியாகராயர் நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதை தவிர்த்து, இங்கு பறக்கும் ரயில் நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது.

சுற்றுப்புறம்

வேளச்சேரி சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புகளில் ஒன்று. வேளச்சேரியை சுற்றிலும் பல தொழினுட்பத் தீர்வகங்கள் உள்ளன. டீசியெசு, சதர்லேண்டு, காக்னிசன்ட் ஆகியவை குறிப்பிடத் தக்கவை. பன்னாட்டு ஆடை, உணவுகள், மின்பொருட்கள் விற்கும் கடைகள் பல உள்ளன. குடிசைகள், நடுத்தரமான வீடுகள் அதிகம் என்றாலும் வானளாவிய குடியிருப்புகளும் பல உள்ளன. தென்னிந்தியர்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் ஆந்திர உணவகங்கள் உள்ளிட்ட பிற மாநில கடைகளும் பல உள்ளன. சென்னையின் மிகப்பெரிய பேரங்காடியான 24 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி இங்கு அமையப்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய லீட் (LEED) சான்றிதழ் பெற்ற 16 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட ஐ டி சி கிராண்ட் சோழா உட்பட மூன்று நட்சத்திர உணவகங்களும் விடுதிகளும் இங்கும் இதன் அருகிலும் அமைந்துள்ளன. இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படும் ஐ ஐ டி மெட்ராசின் மூன்று நுழைவு வாயில்களில் ஒன்று இங்கு அமைந்துள்ளது.

இயற்கை வளங்கள்

சென்னையின் மற்ற பகுதிகளை ஒப்பிடும் போது வேளச்சேரி புறவழிச் சாலையை ஒட்டி அமையப் பெற்ற வேளச்சேரி ஏரி, வேளச்சேரியின் நிலத்தடி நீர் ஆதாரத்திற்கு முக்கிய பங்களிக்கிறது. இந்த ஏரி வேளச்சேரி புறவழிச் சாலையில் ஆரம்பித்து, ஆதம்பாக்கம் வரையிலும் நீண்டு செல்கிறது.

வேளச்சேரியின் குடியிருப்புப் பகுதிகள் மா, தென்னை போன்ற பல வகையான மரங்களைக் கொண்டுள்ளன.


பள்ளிகள்

வேளச்சேரியில் கீழ்க்கண்ட பள்ளிகள் இயங்குகின்றன.

மேலதிகத் தகவல்கள் பள்ளி வகை, பள்ளிகள் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads