வேளிர் (தமிழகம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

வேளிர் (Velir) என்போர் சங்ககாலத்தில் தமிழ்நாட்டில் வாழ்ந்த ஒருசார் குடிமக்கள் ஆவர். வேளிர் குடிமக்களின் அரசன் வேள். அரசன் பெயரோடு வேள் என்னும் சொல் சேர்ந்துவந்தாதால் அவனை வள்ளல் எனக் கொள்ளல் வேண்டும். இதன் பொருள் 'உதவி' என்பதாகும்.[1] எனவே, இவர்களை கொடையாளிகள் என்று சொல்லலாம். சங்ககாலத்தில் வேளிர்கள், மூவேந்தருக்குக் கட்டுப்படாமல் தன்னாட்சி நடத்திவந்தனர். அவ்வப்போது சில வேந்தர்கள் இவர்களின் உதவியை நாடியிருக்கிறார்கள்.

விரைவான உண்மைகள் வேளிர், நாடு ...

சங்காலத்து வேளிர்கள் 20 பேர் இதுவரை அறியப்பட்டுள்ளனர்.[2] அவர்களை மூவேந்தர் நாட்டைக் கொண்டு மூன்று வகையாக பிரிக்கலாம். அவை,

Remove ads

பாண்டிநாட்டு வேளிர்கள்

  1. ஆய் ஆண்டிரன்
  2. பொதியிற் செல்வன் திதியன்
  3. பாரி வேள்
  4. இருங்கோவேள்

சோழநாட்டு வேளிர்கள்

  1. நெடுங்கை வேண்மான்
  2. நெடுவேளாதன்
  3. செல்லிக்கோமான் ஆதன் எழினி
  4. வாட்டாற்று எழினியாதன்
  5. அழுந்தூர்வேள் திதியன்
  6. வேளேவ்வி
  7. வீரைவேண்மான் வெளியன் தித்தன்
  8. நன்னன்சேய் நன்னன்
  9. பொருநன்

சேரநாட்டு வேளிர்கள்

  1. நெடுவேளாவி
  2. வேளாவிக் கோமான் பதுமன்
  3. வையாவிக் கோப்பெரும் பேகன்
  4. நன்னன் வேண்மான்
  5. வெளியன் வேண்மான் ஆய் எயினன்
  6. வெளிமான்
  7. எருமையூரன்

வேளிர் வாழ்ந்த இடங்கள்

  • முத்தூறு என்னும் ஊரில் தொன்முது வேளிர் வாழ்ந்துவந்தனர். இந்த ஊர் மக்களுக்கு நெல் ஒரு குப்பையாம். இதனைப் பாண்டியன் நெடுஞ்செழியன் தனதாக்கிக்கொண்டானாம்.[3][4]
  • வீரை முன்றுறை என்னும் ஊரில் வாழ்ந்த மக்களுக்கு உப்புதான் குப்பையாம். 'அடுபோர் வேளிர்' இங்கு வாழ்ந்துவந்தனர்.[5]
  • குன்றூர் என்னும் ஊரில் 'தொன்றுமுதிர் வேளிர்' வாழ்ந்தனர். அவர்கள் விருந்தோம்பலில் சிறந்து விளங்கினர்.[6]
  • குன்றூரின் கிழக்குப்பக்கம் கடல் இருந்தது. அந்த ஊரில் தொன்றுமுதிர் வேளிர் வாழ்ந்தனர். [7]
Remove ads

வேளிர் போர்கள்

Remove ads

இதனையும் பார்க்க

ஒப்புநோக்குக

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads