வே. அ. கந்தையா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வே. அ. கந்தையா (V. A. Kandiah, செப்டம்பர் 3, 1891 - சூன் 4, 1963) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
Remove ads
ஆரம்ப வாழ்க்கை
கந்தையா இலங்கையின் வடக்கே வேலணை, வங்களாவடியைப் பிறப்பிடமாகக் கொண்டவர். தந்தை வேலுப்பிள்ளை அம்பலவாணர், தாயார் இராசம்மா. இவருடன் உடன்பிறந்தவர்கள் சொர்ணலட்சுமி, இராசலட்சுமி, சுந்தரம்பிள்ளை. ஆரம்பக் கல்வியை வேலணை அமெரிக்க மிசன் பாடசாலையில் பெற்றார்.[1] பின்னர் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி, கொழும்பு புனித யோசேப்பு கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற கந்தையா, இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியலில் பட்டம் பெற்றார். பின்னர் சிறிது காலம் கொழும்பு புனித யோசேப்பு கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர் சட்டக்கல்வி பயின்று வழக்கறிஞராகக் கொழும்பில் பணியாற்றினார்.
Remove ads
அரசியல் வாழ்வு
1947 இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் கொழும்பு மத்திய தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.[2] அதன் பின்னர் இலங்கைத் தமிழரசுக் கட்சியில் இணைந்து 1956 ஆம் ஆண்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[3] மார்ச்சு 1960, சூலை 1960 தேர்தல்களிலும் தமிழரசுக் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[4][5]
சமூகப் பணி
வி. ஏ. கந்தையா 1954 ஏப்ரலில் யாழ்ப்பாணம் புங்குடுதீவில் புங்குடுதீவு மகாசன சபையின் ஆதரவுடன் சிலப்பதிகார விழா ஒன்றை நடத்தினார். புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலயத்தில் மூன்று நாட்கள் நடைபெற்ற இவ்விழாவில் தமிழகத்தில் இருந்து ம. பொ. சிவஞானம், பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன் உட்பட தமிழறிஞர்கள் பலர் சிறப்புப் பேச்சாளர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.[1]
வே. ஆ. கந்தையா 1953-54 காலப்பகுதியில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தின் தலைவராக இருந்து பணியாற்றினார்.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads