சர்மிளாவின் இதய ராகம்

From Wikipedia, the free encyclopedia

சர்மிளாவின் இதய ராகம்
Remove ads

சர்மிளாவின் இதய ராகம் இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது தமிழ் வர்ணத்திரைப்படம். இது 1993இல் திரையிடப்பட்டது. இலங்கையின் வாரப் பத்திரிகையான சிந்தாமணியில் ஜெக்கியா ஜுனைதீன் என்ற பெண் எழுத்தாளர் 32 வாரங்களாக எழுதிய ஒரு தொடர்கதை மிகுந்த வரவேற்பைப் பெற்றதோடு, நாவலாகவும் வெளி வந்தது. இவரது கணவரான பேராதனை ஜுனைதீன் ஏற்கனவே இலங்கையில் தயாரான ஆங்கிலப்படங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். ஈழத்துத் தமிழ்த்திரைப்படங்களான டாக்சி டிரைவர், தெய்வம் தந்த வீடு ஆகியவற்றுக்கும் திரைக்கதை, வசனம் எழுதியவர். எனவே தனது மனைவியின் நாவலை படமாக்க நினைத்தார். இலங்கையின் மூன்று இனத்துக் கலைஞர்களையும் சம்பந்தப்படுத்தி படத்தை ஆரம்பித்தார். ஆனால் படம் நீண்ட காலம் தயாரிப்பில் இருந்துவிட்டது.

விரைவான உண்மைகள் சர்மிளாவின் இதயராகம், இயக்கம் ...

சிங்களத் திரைப்படங்களில் சற்று பிரபலமாக இருந்த சசி விஜேந்திரா, வீணா ஜெயக்கொடி இருவரும் பிரதான பாத்திரங்களிலும், எஸ். ராம்தாஸ், கே. எஸ். பாலச்சந்திரன், எம். எம். ஏ. லத்தீப், கே. ஏ. ஜவாஹர், எஸ். விஸ்வநாதராஜா போன்ற பலர் துணைப் பாத்திரங்களிலும் நடித்தார்கள். சிங்களப் படங்களை இயக்கிய சுனில் சோம பீரிஸ் இந்தப் படத்தை இயக்கினார். படப்பிடிப்பு செய்தவர் ஜே. ஜே. யோகராஜா. சரத் தசநாயக்காவின் இசையில், விஸ்வநாதராஜா, இஸ்மாலிகா, ஜுனைதீன் எழுதிய பாடல்களை, முத்தழகு, கலாவதி, எஸ். வீ. ஆர். கணபதிப்பிள்ளை, ராணி ஜோசப் ஆகியோர் பாடினார்கள்.

Remove ads

குறிப்பு

  • 1989இல் தயாரித்து முடிக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 4 வருடங்கள் கழிந்தபின்னரே 1993இல் திரைக்கு வந்தது.
  • இத்திரைப்படம் "ஒப மட்ட வாசனா" என்ற தலைப்பில் சிங்களத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டது.

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads