ஸ்கந்தமாதா

From Wikipedia, the free encyclopedia

ஸ்கந்தமாதா
Remove ads

ஸ்கந்தமாதா (Skandamata) (சமசுகிருதம்:स्कन्दमाता) ஸ்கந்தன் எனும் கார்த்திகேயனின்[2][3]தாயும், பார்வதியின் அம்சமான நவ துர்கைகளில் ஐந்தாமவர். நவராத்திரி விழாவின் ஐந்தாம் நாளில் பக்தர்களால் ஸ்கந்தமாதா வழிபடப்படுகிறார்.

விரைவான உண்மைகள் ஸ்கந்தமாதா, அதிபதி ...
Remove ads

சிற்பவியல்

நான்கு கைகளும், நெற்றிக்கண் உள்ளிட்ட மூன்று கண்களும் கொண்ட ஸ்கந்தமாதா சிங்கத்தை வாகனமாகக் கொண்டவர். இடது கையில் அபய முத்திரையுடன் காட்சியளிக்கும் ஸ்கந்தமாதா தொடையில் ஆறுமுகம் கொண்ட ஸ்கந்தனை அமர்த்திக்கொண்டு, மற்றொரு கையால் வில் ஏந்தியுள்ளார்..மேலும் பிற இரண்டு கைகளில் தாமரை மலர்களை ஏந்தியுள்ளார். சில நேரங்களில் இம்மாதாவை பத்மாசினி என்றும் அழைப்பர்.[4]

புராணக் கதை

சிவ புராணத்தின்படி[5]சிவன்-பார்வதி திருமணம் முடிந்த பிறகு, கயிலை மலையில் இருவரும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து நடனம் ஆடுகின்றனர். இதனால் தாரகன் தலைமையிலான அரக்கர்கள் சிவ பயமின்றி தேவர்கள் மீது போர் தொடுத்து தேவலோகத்தை விட்டு விரட்டுகின்றனர்.

விஷ்ணு, பிரம்மன் தலைமையில் தேவர்கள் சிவ-பார்வதி நடனமாடும் கயிலை மலைக்கு சென்று தாரகன் முதலிய அரக்கர்களை கொல்ல் கோரிக்கை வைத்தனர். அப்போது சிவபெருமான் நெற்றிக் கண்ணிலிருந்து வெளிப்பட்ட அக்னி கங்கை ஆற்றில் விழுந்தது[6].பார்வதியின் அம்சமான ஸ்கந்தமாதா சிவ பெருமானின் விந்துவை விழுங்கியதால் ஸ்கந்தன் எனும் கார்த்திகேயன் பிறந்தார்[7].ஸ்கந்தன் வளர்ந்த பிறகு தாரகன் முதலிய அரக்கர்களை வென்று தேவர்களுக்கு மீண்டும் தேவலோகத்தை திரும்ப அளித்தார்.

Remove ads

மேலும் காண்க

மேற்கொள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads