ஸ்டுவர்ட் தீவு

From Wikipedia, the free encyclopedia

ஸ்டுவர்ட் தீவுmap
Remove ads

ஸ்டுவர்ட் தீவு / ராக்கியூரா (Stewart Island / Rakiura) என்பது நியூசிலாந்தின் மூன்றாவது பெரிய தீவாகும். இது தெற்குத் தீவின் தெற்கே 30 கி.மீ. தொலைவில், ஃபோவா நீரிணைக்குக் குறுக்கே அமைந்துள்ளது. ஸ்டுவர்ட் தீவின் மொத்தப் பரப்பளவு 1,680 சதுரகி.மீ. ஆகும்.[1] 2013 கணக்கெடுப்பின் படி இங்கு 381 பேர் நிரந்தரமாக வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் ஓபான் என்ற குடியேற்றப்பகுதியில் வசிக்கின்றனர்.

விரைவான உண்மைகள் ராக்கியூரா (மாவோரி), புவியியல் ...
Remove ads

வரலாறு

உள்ளூர் மாவோரி மொழியில் ராக்கியூரா என்பது பொதுவாக வழங்கப்படும் பெயராகும். ஒளிரும் வானங்கள் என இதற்குப் பொருள்.[2] இத்தீவை 1770 இல் முதன்முதலாகக் கண்ணுற்ற ஐரோப்பியர் ஜேம்ஸ் குக் ஆவார். ஆனாலும், அவர் இதனைத் தெற்குத் தீவின் ஒரு பகுதியாகவே கருதினார். இதனால் இதற்கு தெற்கு முனை (South Cape) எனப் பெயரிட்டார். 1809 ல் ஆஸ்திரேலியாவின் ஜாக்சன் துறையில் (சிட்னியில்) இருந்து திமிங்கில வேட்டைக்காக இங்கு வந்த பெகாசசு கப்பலின் முதல் அதிகாரியான வில்லியம் ஸ்டுவர்ட்டின் நினைவாக இத்தீவிற்கு "ஸ்டுவர்ட் தீவு" எனப் பெயரிடப்பட்டது. இத்தீவின் நிலவரையை இவரே முதன்முதலில் வரைந்தார். இதன் மூலம் இவர் இத்தீவின் வடமுனையைக் கண்டறிந்து, இது ஒரு தீவு என நிறுவினார். இங்குள்ள மிகப்பெரும் தென்கிழக்குத் துறைமுகம் பெகாசசு துறை என அழைக்கப்படுகிறது. இவர் மீண்டும் 1820களிலும், 1840களிலும் இத்தீவிற்கு பயணம் மேற்கொண்டார்.[3]

1841 இல் இத்தீவு நியூசிலாந்தின் மூன்று மாகாணங்களில் ஒன்றாக ஆக்கப்பட்டு அதற்கு நியூ லெயின்ஸ்டர் எனப் பெயரிடப்பட்டது. ஆனாலும், ஐந்தாண்டுகளுக்குப் பின்னர் இம்மாகாணம் இல்லாதொழிக்கப்பட்டு, தெற்குத் தீவையும் உள்ளடக்கிய நியூ மன்ஸ்டர் மாகாணத்தினுள் கொண்டு வரப்படது.[4] பின்னர் 1853 இல் நியூ மன்ஸ்டர் மாகாணமும் நீக்கப்பட்டு, ஸ்டுவர்ட் தீவு 1861 வரை ஒட்டாகோ மாகாணத்தில் சேர்க்கப்பட்டது. 1876 இல் மாகாணங்கள் இல்லாதொழிக்கப்பட்டன.

20ம் நூற்றாண்டு வரை ஸ்டுவர்ட் தீவு என்ற பெயரே அதிகாரபூர்வமாக இருந்தது. பின்னர் 1998 ஆம் ஆண்டில் இத்தீவின் பெயர் அதிகாரபூர்வமாக ஸ்டுவர்ட் தீவு/ராக்கியூரா என மாற்றப்பட்டது.[5]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads