ஸ்ரீதேவி
நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீதேவி (Sridevi, 13 ஆகத்து 1963 - 24 பெப்ரவரி 2018) தமிழ்நாடு, விருதுநகர் மாவட்டம், மீனம்பட்டியில்[1][6] பிறந்து இந்தியத் திரைப்படத் துறையில் புகழ்பெற்ற ஒரு நடிகை ஆவார். 1969ல் துணைவன் திரைப்படத்தில், குழந்தை நட்சத்திரமாக முருகன் வேடத்தில் அறிமுகமானார்.[7]
கதாநாயகியாக இவர் நடித்த முதல் படம் கே. பாலச்சந்தரின் மூன்று முடிச்சு (1976). ஆரம்ப காலத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த்துடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்தார்.[8]
இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி திரைப்படங்களில் நடித்தார். தனது நடிப்பிற்காக தமிழ் நாடு, ஆந்திர மாநில அரசுகளின் சிறந்த நடிகைக்கான விருதுகளையும், கேரள அரசின் சிறந்த குழந்தை நட்சத்திர விருதையும், நான்கு முறை பிலிம்பேர் விருதினையும் வென்றார். இது வரை 300 படங்களில் நடித்துள்ளார். இவரது கடைசி படமும் 300வது படமாகும்.
கலைத்துறையில் இவர் ஆற்றிய பணிக்காக இவருக்கு 2013ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது.
Remove ads
குடும்பம்
- இவர் இயற்பெயர் ஸ்ரீலட்சுமிதேவி என்ற தனது பெயரை திரையுலகிற்காக சுருக்கமாக ஸ்ரீதேவி என்று மாற்றி வைத்து கொண்டார்.
- இவரது பெற்றோர்கள் ஐய்யப்பன் நாயுடு – இராஜேஸ்வரி தம்பதியருக்கு 13 ஆகஸ்டு 1963 அன்று சிவகாசி ஊராட்சி ஒன்றியம், அனுப்பன்குளம் ஊராட்சியில் உள்ள மீனம்பட்டி கிராமத்தில் பிறந்தார்.[1]
- இவரது தங்கை லதாவின் கணவர் சஞ்சய் ராமசாமி, 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விருதுநகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவர்.[9]
- இவர் தந்தை ஐய்யப்பன் நாயுடு அவர்கள் அப்போது தமிழகத்தில் புகழ்பெற்ற முன்னணி வழக்கறிஞராகவும், விருதுநகர் மற்றும் சிவகாசி வட்டாரத்தில் அரசியல் செல்வாக்கு மிக்க குடும்பத்தை சார்ந்தவராவார்.
- அதன் பிறகு ஐய்யப்பன் நாயுடு அவர்கள் ஏற்கனவே திருமணம் ஆன போதிலும் தனது வழக்கறிஞர் பணி காரணமாக சென்னையில் வசித்த போது ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த ராஜேஸ்வரி ரெட்டி என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டனர் அவர்களின் அன்பின் அடையாளமாக ஸ்ரீதேவி மற்றும் ஸ்ரீலதா என்ற இரண்டு பெண் பிள்ளைகள் பிறந்தனர்.
- மேலும் 2 சூன் 1996 அன்று ஸ்ரீதேவிக்கும், இந்தித் திரைப்பட தயாரிப்பாளரான போனி கபூருக்கும் திருமணம் நடைபெற்றது. ஸ்ரீதேவி - போனி கபூர்[10] தம்பதியருக்கு ஜான்வி மற்றும் குஷி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர்.[11]
Remove ads
நடித்த திரைப்படங்கள்
தமிழ்த் திரைப்படங்கள்
Remove ads
பாலிவுட்
ஸ்ரீதேவி பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னக மொழிப் படங்களில் நடித்துப் பெரும் புகழ்பெற்ற பின்னர், 1980-களின் தொடக்கத்தில் பாலிவுட் சென்று மிகப் பெரிய வெற்றிகளைக் கண்டார். 1980-களின் தொடக்கத்தில் அவர் நடித்த இந்திப் படங்கள் மிகப் பெரிய வெற்றி பெற இந்தியாவின் முதல் பெண் சூப்பர் ஸ்டார் எனப் பெயர்ப் பெற்றார். ராஜேஷ் கன்னா, தர்மேந்திரா, மிதுன் சக்கரவர்த்தி, அமிதாப் பச்சன், ரிஷிகபூர், அனில் கபூர், சல்மான் கான், சஞ்சய் தத் ஆகிய பெரும் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். மிக நீண்ட காலம் பாலிவுட்டில் அவர் நடித்துவந்தார்.
மறைவு
2018 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 24ஆம் நாள் சனிக்கிழமை இரவு துபாயில் மாரடைப்பு காரணமாக காலமானார் என்று செய்திகள் வெளியானது.[12] பின்னர் வெளியான பிணக்கூற்று அறிக்கை, அவர் நீரில் மூழ்கி இறந்ததாகவும், அவரது குருதியில் மதுபானம் இருந்ததாகவும் கூறியது.[13][14] உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட அவரது உடலானது பெப்ரவரி 27, 2018 அன்று தனி விமானம் மூலம் துபாயிலிருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. பின்பு இவரது உடலை பெப்ரவரி 28, 2018 அன்று மும்பையில் உள்ள வில்லே பார்லே மின்மயானத்தில் முழு அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.[15]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads