ஸ்ரீ ராணா விக்கிரமா
சிங்கபுர இராச்சியத்தின் மூன்றாவது அரசர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்ரீ ராணா விக்கிரமா (மலாய் மொழி: Paduka Sri Rana Wikrama; ஆங்கிலம்: Ranavikrama); என்பவர் சிங்கபுர இராச்சியத்தின் மூன்றாவது அரசர். ஸ்ரீ விக்கிரம வீராவின் மூத்த மகன் ஆவார்.

செஜாரா மெலாயு எனும் மலாய் இலக்கிய வரலாற்றுச் சான்றுகளின்படி, இவர் 1362-ஆம் ஆண்டில் இருந்து 1375-ஆம் ஆண்டு வரை சிங்கப்பூரை ஆட்சி செய்தவர். இவர் பதவி ஏற்பதற்கு முன்பு ராஜா மூடா (Raja Muda) என்று அழைக்கப்பட்டார். மற்றும் பெண்டகாரா துன் பெர்பதி முக பெர்ஜாஜர் (Tun Perpatih Muka Berjajar) என்பவரின் மகளை மணந்தவர்.[1]
Remove ads
பொது
ஸ்ரீ ராணா விக்கிரமாவின் தந்தையார் ஸ்ரீ விக்கிரம வீராவின் ஆட்சியின் கீழ் சிங்கபுராவின் ஜாவானிய இராச்சியமான மஜபாகித் பேரரசு படையெடுப்பு செய்தது. அந்தப் படையெடுப்பில் மஜபாகித் பேரரசு தோல்வி அடைந்தது.
இருந்த போதிலும், நகரகிரேதாகமம் (Nagarakretagama) எனும் ஜாவானியக் காவியத் தொகுப்பின் 1365-ஆம் ஆண்டுப் பதிவில், சிங்கபுரத்தை மஜபாகித் பேரரசின் அடிமை அரசாகப் பட்டியலிடுகிறது.
பெருலாக் இராச்சியம்
ஸ்ரீ ராணா விக்கிரமா ஆட்சியின் போது, சுமத்திராவில் இருந்த பெருலாக் எனும் முஸ்லீம் இராச்சியத்துடன் (Sumatran Muslim kingdom Peureulak) அரசதந்திர உறவுகளை ஏற்படுத்திக் கொண்டார்.[2]
இவருடைய காலத்தில் தான், அசாதாரண வலிமை கொண்ட பாடாங் (Badang) எனும் பழம்பெரும் மனிதர், சிங்கபுர அரசவையில் தன் வலிமையை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.[3]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads