ஹரிபிரசாத் சௌரசியா

இந்திய பாரம்பரிய புல்லாங்குழல் இசைக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia

ஹரிபிரசாத் சௌரசியா
Remove ads

பண்டிட் ஹரிபிரசாத் சௌராசியா (Pandit Hariprasad Chaurasia, பிறப்பு 1, சூலை 1938) என்பவர் இந்திய பாரம்பரிய புல்லாங்குழல் இசைக் கலைஞர் ஆவார். இவர் பாரம்பரிய இந்துஸ்தானி இசையில் பன்சூரி என்ற ஒரு இந்திய புல்லாங்குழல்[1] வாசிக்கிறார்.

Thumb
ஹரிபிரசாத் சௌரசியா

ஆரம்ப வாழ்க்கை

இந்தியாவின், உத்தரப்பிரதேச மாநிலம், அலகாபாத்தில் ஹரிபிரசாத் பிறந்தார்.[2] அவருடைய ஆறு வயதில் அவரது தாயார் இறந்தார்.  தந்தையின் உதவி இல்லாமல் இசையைக் கற்றுக் கொள்ள வேண்டியிருந்தது, ஏனெனில் அவரது தந்தை ஹரிபிரசாத்தை மல்யுத்த வீரராக்க விரும்பினார். அவர் தனது தந்தையாருடன் அகதாவுக்கு சில சமயம் மூலும் அழைத்துச் சென்றார், எனினும் அவர் அவரது நண்பரின் வீட்டிலேயே அவர் இசைப் பயிற்சி பெற்றார். [3]

தொழில்

ஹரிபிரசாத் தனது அண்டை வீட்டாரான பண்டிட் ராஜராமுவிடம் 15 வயதில் குரல் இசை கற்றுக் கொண்டார். பிறகு, வாரணாசியில் பண்டிட் போலன்நாத் பிரசன்னாவிடம்  எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் புல்லாங்குழலில் இசை வாசிக்க கற்றுக்கொண்டார். அவர் 1957 இல் ஒடிசா மாநிலத்தில் உள்ள, கட்டாக் வானொலி  நிலையத்தில் பணியில் சேர்ந்தார் மற்றும் ஒரு இசையமைப்பாளராகவும் கலைஞராகவும் பணியாற்றினார்.[2][4]  பின்னர், அகில இந்திய வானொலியில் பணிபுரிந்த போது, பாபா அலாவுதீன் கானின் மகள் அன்னபூர்ணா தேவிக்கு வழிகாட்டினார். 

Remove ads

தனிப்பட்ட வாழ்க்கை

கமலா[5] மற்றும் அனுராதாவை[3] திருமணம் செய்து கொண்டார். அவருக்கு மூன்று மகன்கள் வினய், அஜய், ராஜீவ், ஐந்து பேத்தி மற்றும் ஒரு பேரன். [6]

பிரபலமான கலாச்சாரத்தில்

2013 ஆம் ஆண்டு ஆவணப்படமான பன்சூர் குருவில், சௌராசியாவின் வாழ்க்கை மற்றும் மரபு ஆகியவற்றைக் கொண்டதாக எடுக்கப்பட்டது இந்த ஆவணப்படமானது ராஜீவ் சௌராசியாவால் இயக்கப்பட்டு, இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் பிலிம்ஸ் பிரிவால் தயாரிக்கப்பட்டது. [7][8]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads