ஹாங்காங் போராட்டம் 2019

ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்குபவர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை சந்தி From Wikipedia, the free encyclopedia

ஹாங்காங் போராட்டம் 2019
Remove ads

ஹாங்காங் போராட்டம் 2019 (2019 Hong Kong protests), ஹாங்காங்கில் குற்ற வழக்குகளில் சிக்கிய கைதிகளை சீனா, தைவான் அல்லது மக்காவு பகுதிகளுக்கு நாடு கடத்தி, குற்ற வழக்கு விசாரணையை சந்திக்க வைக்க வசதியாக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கேரி லாம் தலைமையிலான ஹாங்காங் அரசு நிர்வாகம் ஏப்ரல், 2019-இல் முடிவு செய்தது. இச்சட்டத் திருத்தத்திற்கு ஹாங்காங் மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது. அதை தொடர்ந்து நடந்து வரும் போராட்டங்கள் பற்றியது தான் ஹாங்காங் போராட்டம் 2020 ஆகும்.[1]

Thumb
ஆங்காங் போராட்டக்கார்களின் ஊர்வலம், 9 சூன் 2019
Remove ads

எதிர்ப்புகள்

பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், மாணவர்கள் இச்சட்ட மசோதாவிற்கு எதிராக 9 சூன் 2019 முதல் ஹாங்காங் அரசிற்கு எதிராக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.[2] இப்போராட்டத்தில் 800 அதிகமான இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.[3] ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் ஈடுபட்டவர்களை, சீனாவிற்கு அனுப்பி விசாரணை செய்வதற்கான சட்ட திருத்த மசோதாவை ஹாங்காங் அரச நிர்வாகி கேரி லாம் திரும்பப் பெற்றார்.

இதற்கிடையில் சீனாவில் கம்யூனிஸ்ட் ஆட்சியின் 70-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் அக்டோபர் மாதம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.[4] ஆனால் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் போராட்டம் வெடித்தது. பல்லாயிரக்கணக்கானோர் முகமூடி அணிந்து கொண்டு சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Remove ads

கைதுகளும், காயம்பட்டோரும்

16 அக்டோபர் 2019 முடிய நடைபெற்ற 400 போராட்டங்களில் 2200 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் காவல்துறையினரின் அடக்குமுறையால் 1100 பேர் காயமடைந்துள்ளனர்.[5]

சீன அதிபரின் எச்சரிக்கை

சீனாவைப் பிரிக்க நினைத்தால் "நசுங்கிய உடல்கள், நொறுங்கிய எலும்புகள்" மிஞ்சும் என்று என ஹாங்காங் போராட்டக் காரர்களுக்குச் சீன அதிபர் ஷி ஜின்பிங் நேபாள விஜயத்தின் போது 14 அக்டோபர் 2019 அன்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.[6][7]

சட்ட முன்வடிவை ஆங்காங் நாடாளுமன்றம் திரும்பப் பெறுதல்

போராட்டக்காரர்களின் நீண்ட கால போராட்டங்களுக்குப் பின்னர் குற்ற வழக்குகளில் பின்னணி கொண்டோரை ஆங்காங்கிலிருந்து சீனாவிற்கு நாடு கடத்தும் சட்ட முன்வடிவை ஆங்காங் நாடாளுமன்றம் 23 அக்டோபர் 2019 அன்று திரும்ப கொண்டதாக முறைப்படி அறிவித்தது.[8]

பின்னணி

குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்களை சீனா, மக்காவு மற்றும் தைவானுக்கு ஆங்காங் பகுதியிலிருந்து நாடுகடத்த வழிவகை செய்வதற்கு நாடு கடுத்தும் சட்டத் திருத்தம் செய்ய காரணமாக இருந்தது, 2018-இல் ஹாங்காங்கிற்கு தப்பி செல்வதற்கு முன்பு, தைவானில் கர்ப்பிணியாக இருந்த தனது காதலியை கொலை செய்ததாக சான் தொங்-காய் என்பவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. ஹாங்காங்கிற்கும், தைவானுக்கும் நாடு கடத்தும் ஒப்பந்தம் இல்லாத நிலையில், இந்த வழக்கு வந்தபோது, குற்றவாளிகளை நாடு கடத்துவது தொடர்பான இச்சட்டத்தை திருத்துவதாக ஆங்காங் அரசு சட்ட முன்வடிவத்தை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்தது. காதலியின் கடன் அட்டையிலிருந்து பணம் எடுத்தார் என்ற பணமோசடி வழக்கில் சான் தொங்-காய் ஆங்காங் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட 20 வயதான சான் தொங்-காய், பாதிக்கப்பட்ட குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டதோடு, தன் மீதான குற்றச்சாட்டை தைவானில் எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.[9]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads