மக்காவு

From Wikipedia, the free encyclopedia

மக்காவுmap
Remove ads

மக்காவு சிறப்பு நிர்வாகப் பிரிவு (Macau Special Administrative Region), பொதுவாக மாக்காவு (Macau அல்லது Macao), என்பது மக்கள் சீனக் குடியரசின் இரண்டு சிறப்பு நிர்வாகப் பகுதிகளில் ஒன்றாகும். மற்றையது ஹாங்காங் ஆகும். இது டிசம்பர் 20, 1999 இல் அமைக்கப்பட்டது. இதன் எல்லைகளாக வடக்கே குவாங்டொங் மாகாணம், கிழக்கு, மற்றும் தெற்கில் தென்சீனக் கடல் ஆகியன அமைந்துள்ளன. இதன் மேற்குப்பகுதியில் பேர்ள் ஆறு ஓடுகிறது. புடவைத் தொழில், இலத்திரனியல் மற்றும் விளையாட்டுப் பொருட்கள் ஆகியவை இங்கு மிக முக்கிய பொருளாதார வளத்தைத் தருகின்றன.

விரைவான உண்மைகள் மக்காவு澳門特別行政區 àomén tèbié xíngzhèngqūRegião Administrativa Especial de Macauமக்காவு சிறப்பு நிர்வாகப் பிரிவு, தலைநகரம் ...
Thumb
மக்காவுவின் வரைபடம்

போர்த்துக்கீச வியாபாரிகள் முதன் முதலில் இங்கு 16ம் நூற்றாண்டில் குடியேறினர். பின்னர் இது போர்த்துகலினால் 1999 வரையில் சீனாவுக்குக் கையளிக்கப்படும் வரையில் ஆளப்பட்டு வந்தது. சீன-போர்த்துக்கல் ஒப்பந்தத்தின்படி மக்காவு முழுமையான சுயாட்சியுள்ள அமைப்பாக குறைந்தது 2049 ஆம் ஆண்டு வரையில் இருக்கும் என இரு தரப்பினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. "ஒரு நாடு, இரண்டு ஆட்சிகள்" என்ற கொள்கைப்படி மக்காவுவின் எல்லைப் பாதுகாப்புக்கும் வெளிநாட்டுறவுக்கும் சீனாவின் மத்திய அரசு பொறுப்பாகும். அதே நேரத்தில் மக்காவுக்கு அதன் உள்நாட்டு விவகாரங்களில் (சட்டம், காவற்துறை, நாணயம், வரி போன்றவை) தன்னதிகாரம் இருக்கும்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads