ஹிகாரு நகமுரா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹிகாரு நாகமுரா (பிறப்பு: டிசம்பர் 9, 1987) ஒரு அமெரிக்க சதுரங்க கிராண்ட்மாஸ்டர் மற்றும் இணைய ஓடையாளர் ஆவார். ஒரு சதுரங்க மேதையான இவர், தனது 15 வயதில் (15 வயது, 79 நாட்கள்) கிராண்ட்மாஸ்டர் பட்டத்தை பெற்றார். இவர் இப்பட்டதைப் பெற்ற போது இச்சாதனையை செய்த மிக இளைய அமெரிக்கராக இருந்தார். இவர் அமெரிக்க சதுரங்க வெற்றி வீரர் பட்டத்தை ஐந்து முறை வென்றுள்ளார். [1] இவர் டாடா ஸ்டீல் சதுரங்க போட்டியின் குழு 'A' இன் 2011 பதிப்பை வென்றார். மேலும் ஐந்து சதுரங்க ஒலிம்பியாட்களில் அமெரிக்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி, ஒரு குழு தங்கப் பதக்கம் மற்றும் இரண்டு அணி வெண்கலப் பதக்கங்களை வென்றார்.
ஆகஸ்ட் 2015 இல், அவரது உச்ச யூ.எசு.சி.எஃப் மதிப்பீடான 2900ஐ அடைந்தார்.[2] அக்டோபர் 2015 இல், அவர் தனது உச்ச FIDE மதிப்பான 2816 ஐ அடைந்தார். இதன் மூலம் உலகத்தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். மே 2014 இல், பிடே அதிகாரப்பூர்வ ரேபிட் மற்றும் பிளிட்ஸ் சதுரங்க மதிப்பீடுகளை வெளியிடத் தொடங்கியபோது, நகமுரா இரண்டு பட்டியல்களிலும் உலகின் முதல் இடத்தைப் பிடித்தார். தரவரிசையின் இரண்டாவது வெளியீட்டில் அவரை மேக்னசு கார்ல்சன் முறியடித்தார் [3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads