ஹிப்பார்க்கஸ்
2 ஆம் நூற்றாண்டின் கிரேக்க வானியலாளர், புவியியலாளர் மற்றும் கணிதவியலாளர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஹிப்பார்க்கஸ் (Hipparchus, கி.பி.190– கி.பி. 120 ),கிரேக்க வானவியலாளர்,கணிதவியலாளர், புவியியலாளர் மற்றும் சோதிடவியலாளர் ஆவார். கோணவியலின் நிறுவனர் எனக் கருதப்படுபவர். கி.மு இரண்டாம் நூற்றாண்டிலேயே விண்மீன்களை வெறும் கண்களால் ஆராய்ந்து விண்மீன் பட்டியல் ஒன்றைத் தயாரித்தவர். அதனைக் கொண்டு விண்மீன் கோளம் ஒன்றைத் தயாரித்து அதில் அந்தப் பட்டியலில் உள்ள வின்மீன்களின் இருப்பிடத்தைக் குறிப்பிட்டார். இதனால் இவர் இக்கால கோளரங்கங்களின் முன்னோடி என அழைக்கப்பட்டார். தொலை நோக்கிகளோ, பிற கருவிகளோ இல்லாத காலத்தில் தனது கடும் உழைப்பால் வானவியல் துறைக்கு அடித்தளம் அமைத்து பல துறைகளிலும் அரிய கண்டுபிடிப்புகளையும் , கணக்கீடுகளையும் செய்த அறிஞர் ஹிப்பார்க்கஸ் ஆவார்.
Remove ads
விண்மீன்களை அளவிடும் முறை

புவி அதன் சுற்றுப் பாதையில் இருவேறு இடங்களில் செல்லும்போது அருகிலுள்ள விண்மீன்கள் தனக்குப் பின்னால் வெகு தொலைவிலுள்ள வின்மீண்களின் பின்னனியில் அசைவது போல் தோற்றமளிக்கும். இதனை இடமாறு தோற்றம் (Parallax)என்பர். இதனைக் கொண்டு விண்மீன்களின் தொலைவை அளக்கலாம். ஹிப்பார்க்கஸ் சந்திரனின் இடமாறு தோற்றத்தைக் கணித்தார் ஆனால் சூரியனில் காணப்படும் இடமாறு தோற்றத்தை அவரால் கணிக்க முடியவிலை . ஏனெனில் 8 'ஆர்க்' நொடியே உள்ள அதனை உணர பெரிய தொலை நோக்கிகளும், சிறப்புப் பாதுகாப்புக் கருவிகளும் தேவை. இவை இவரது காலத்திற்குப் பின் சுமார் 1700 ஆண்டுகளுக்குப் பின்பே கண்டு பிடிக்கப்பட்டன.
Remove ads
மேக்னியூட் அளவு முறை

விண்மீன்களை அவற்றின் ஒளியின் அடிப்படையில் வேறுபடுத்துவது மேக்னியூட் அளவு முறை என்ப்படும் இதில் ஒளி மிகுந்த விண்மீன் சுழிஅளவு கொண்டதாகவும், கண்ணுக்கு மிக மங்கலாகவும் தெரியும்.ஒளி குறைந்த விண்மீன்கள் ஒளியுடன் தெரியும். இவற்றில் 6-வது மாக்னியூட் மற்றும் 7 -வது மக்னியூட் விண்மீன்களை தொலை நோக்கியைக் கொண்டுதான் காண இயலும்.இவை மிக மங்கலாகத் தெரிபவை. இன்றும் வானவியலாளர்கள் இந்த முறையையே பின்பற்றுகின்றனர். இந்த முறையைக் கண்டறிந்தது ஹிப்பார்க்கஸ் ஆவார்.
Remove ads
வானவியல் ஆய்வுகள்

சந்திர கிரகணம் சூரிய கிரகணங்களைக் கணித்தறியும் முறை, வானில் சந்திரன் சூரியன் ஆகியவற்றின் அளவு(சுமார் அரை பாகை), விண்ணில் சூரியன் செல்வது போல் தோன்றும் சூரியப்பாதை, சம இரவு, சம பகல், கதிர்த் திருப்பநாள்கள் பற்றிய கணிப்புகள், ஆகிய வானவியல் ஆய்வுகளுக்கு ஹிப்பார்க்கஸ் முன்னோடி ஆவார். புவியின் சுழலச்சு எப்போதும் ஒரே இடத்தை நோக்கி இருப்பதில்லை. சுமார் 26,000 ஆண்டுகளுக்கு ஒரு முறை என்ற கணக்கில் இது சுழல்கிறது. இதனை 'உத்திராயண மாற்றம்'(Precession of Equinox) என்ற பெயரில் குறிப்பிடுவர். இதனை முதன் முதலில் கண்டறிந்த பெரும் சாதனை இவரையே சாரும்.

விண்மீன்களைக் கணக்கிடும் விண்கலம்
1989-ஆம் ஆண்டு ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA)இடமாறு தோற்ற முறையில் விண்மீன்களைத் துல்லியமாக அளவீடு செய்ய ஒரு மிகச் சிறந்த விண்கலத்தை அனுப்பியது. அதன் மூலம் பெறப்படும் தகவல்களைக் கொண்டு மிகவும் மேம்பட்ட விண்மீன் பட்டியல் தயார் செய்யப்பட்டு நாள்தோறும் அது புதிய விண்மீன்கள் பற்றிய தகவல்களால் விரிவடைந்து வருகிறது. இந்த அரிய வின்கலத்திற்கு ஹிப்பார்ச்சஸின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
உசாத்துணை
அறிவியல் ஒளி, 2008 ஆகஸ்ட் இதழ்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads