ஹிரோஷிமா சமாதான நினைவகம்

From Wikipedia, the free encyclopedia

ஹிரோஷிமா சமாதான நினைவகம்
Remove ads

ஜப்பானிய மொழியில், அணுகுண்டுக் குவிமாடம் (Atomic Bomb Dome) எனப் பொருள்படும் கென்பாக்கு டோம் (原爆ドーム) என்னும் பெயர் கொண்ட ஹிரோஷிமா சமாதான நினைவகம், ஜப்பானின், ஹிரோஷிமா நகரில் உள்ளது. இரண்டாம் உலகப் போரின்போது, அமெரிக்கா இந்த நகரத்தின் மீது முதலாவது அணுகுண்டைப் போட்டது. இந்த அணுகுண்டால் இந்தக்கட்டடம் நேரடியாகப் பாதிக்கப்பட்டது. ஆற்றல் மிக்க அணுகுண்டால் பாதிக்கப்பட்டும் அந்நகரத்தில் எஞ்சி நின்ற ஒரே கட்டடம் இதுதான். கட்டடத்தின் புறச்சுவர்கள் பாதிக்கப்பட்டாலும் இதன் குவிமாடம் பாதிக்கப்படவில்லை. நகரத்தை மீண்டும் உருவாக்கியபோது, இதை மீண்டும் கட்டாமல் அணுகுண்டின் அவலங்களை நினைவுகூரும்வகையில் இதை நினைவகமாக பராமரிக்க முடிவுசெய்யப்பட்டது. இது 26.ஆகத்து 1996 இல் யுனெஸ்கோ, பாரம்பரிய கட்டடமாக அறிவித்தது. இந்த கட்டடத்தை செக் குடியரசைச் சேர்ந்த ஜான் லெட்செல் (Jan Letzel) வடிவமைத்துள்ளார். இது கட்டப்பட்ட 1915 முதல் ஹிரோஷிமா வர்தக கண்காட்சியகம் என்ற பெயரில் பயன்பாட்டுக்கு வந்தது. 1933இல் ஹிரோஷிமா தொழிற்சாலை மேம்பாட்டு காட்சியகம் என்ற பெயர் மாற்றப்பட்டுப் பயன்படுத்தப்பட்டது.

விரைவான உண்மைகள் இரோசிமா சமாதான நினைவகம் Genbaku Dome, வகை ...

34°23′44″N 132°27′13″E

Remove ads
Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads