1,3,5-டிரையாக்சேன்டிரையோன்
வேதிச்சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
1,3,5-டிரையாக்சேன்டிரையோன் (1,3,5-trioxanetrione) என்பது C3O6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கருதுகோள் நிலை வேதிச் சேர்மமாகும். கார்பனின் ஆக்சைடு சேர்மமான இது 1,3,5-டிரையாக்சாசைக்ளோயெக்சேன்-2,4.6-டிரையோன் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. மேலும், இதை கார்பன் டையாக்சைடின் வளைய மும்மை என்றும், அல்லது 1,3,5-டிரையாக்சேனின் (1,3,5-டிரையாக்சாசைக்ளோயெக்சேன்) முக்கீட்டோன் என்றும் கருதமுடியும்.
அறை வெப்பநிலையில் 1,3,5-டிரையாக்சேன்டிரையோன் நிலைப்புத்தன்மை இல்லாத சேர்மம் என்று கோட்பாட்டு கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. (8 நொடிகளுக்கும் குறைவான அரை வாழ்வுக்காலம்) ஆனால் -196 ° செல்சியசு வெப்பநிலையில் இது நிலைப்புத்தன்மை கொண்டுள்ளது[1].
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads