1984 மன்னார் படுகொலைகள்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

1984 மன்னார் படுகொலைகள் 1984 டிசம்பர் 4 அன்று இலங்கையின் வடக்கே மன்னார் நகரில் இலங்கை இராணுவம் 107 க்கும் 150 க்கும் இடைப்பட்ட தமிழ் மக்களைப் படுகொலை செய்த நிகழ்வாகும்.[1]

விரைவான உண்மைகள் இடம், ஆள்கூறுகள் ...

மூன்று இராணுவ வாகனங்கள் கண்ணிவெடியில் சிக்கியதில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கு நடவடிக்கையாக இப்படுகொலைகள் இடம்பெற்றன. மன்னார் மத்திய மருத்துவமனை, அஞ்சலகம், கத்தோலிக்க திருச்சபை மடம் ஆகிய இடங்களிலும், மற்றும் நெல் வயல்களில் பணியாற்றிக் கொண்டிருந்த விவசாயிகள், பேருந்துப் பயணிகள் மீது இராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டது. மன்னார் நகரைச் சுற்றியுள்ள முருங்கன், பரப்பன்கடல் போன்ற கிராமங்களிலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. இத்தாக்குதல்களை அடுத்து அன்றைய இலங்கை அரசுத்தலைவர் ஜெயவர்தனா விசாரணைக்காக சனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமித்தார். இவ்வாணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்ட கத்தோலிக்க திருச்சபையின் உள்ளூர் மதகுரு மேரி பஸ்டியான் 1985 சனவரியில் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலைகளுக்கு சாட்சியமளித்த மெதடிஸ்த மறைப்பரப்புனர் ஜோர்ஜ் ஜெயராஜசிங்கம் 1984 டிசம்பரில் கொலை செய்யப்பட்டார்.[2][3]

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads