2008 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெய்சிங்கில் நடைபெற்ற 2008 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா கலந்துகொண்டது. இப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் 56 வீரர்கள் 13 விளையாட்டுகளில் கலந்து கொண்டார்கள். இதில் 16 வீரர்கள் தட கள விளையாட்டுக்களில் பங்கு கொண்டார்கள்.
இதுவே, இதுவரை நடந்த ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா அதிக பதக்கங்கள் வென்ற போட்டி ஆகும். 2008 போட்டிகளில் இந்தியா 3 பதக்கங்களைப் பெற்றது. இந்த மூன்று பதக்கங்களும் தனி நபர் பிரிவில் கிடைத்தன.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு தனி நபர் பிரிவில் தங்கம் கிடைத்தது. அபினவ் பிந்த்ரா 10 மீட்டர் துப்பாக்கி சுடுதலில் தங்கப் பதக்கத்தை பெற்றார்.[1][2]
Remove ads
பதக்க வெற்றியாளர்கள்
சாதனையாளர்கள்
- அபினவ் பிந்த்ரா - 10 மீ கைத்துப்பாக்கி - குறி பார்த்துச் சுடுதல் - தங்கம்
- சுசீல் குமார் - 66 கிகி மற்போர் - வெண்கலம்
- விஜேந்தர் குமார் - 75 கிகி குத்துச்சண்டை - வெண்கலம்
- அகில் குமார் - காலிறுதி வரை முன்னேற்றம் (குத்துச்சண்டை)
- ஜிதேந்தர் குமார் - காலிறுதி வரை முன்னேற்றம் (குத்துச்சண்டை)
- சாய்னா நேவால் - காலிறுதி வரை முன்னேற்றம் (பூப்பந்தாட்டம்)
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads