2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2013 மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணம் (2013 Women's Cricket World Cup) பத்தாவது மகளிர் துடுப்பாட்ட உலகக்கிண்ணமாகும். ஒவ்வொரு அணியும் 50 பந்துப் பரிமாற்றங்களுடன் விளையாடும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட முறையில் விளையாடப்படுகிறது. சனவரி 31, 2013 முதல் பெப்ரவரி 18 வரை பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையால் நடத்தப்பெறும் இப்போட்டிகளை இந்தியா மூன்றாவது முறையாக ஏற்று நடத்துகிறது. இதற்கு முன்னதாக 1978இலும் 1997இலும் இந்தியாவில் இப்போட்டிகள் நடந்தேறியுள்ளன.[1][2]
ஆஸ்திரேலிய மகளிர் துடுப்பாட்ட அணி இந்தக் கிண்ணத்தை ஆறாவது முறையாக வென்றது; இறுதி ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியை 114 ஓட்டங்கள் வேறுபாட்டில் தோற்கடித்தது.[3][4]
Remove ads
பங்கேற்கும் அணிகள்
இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் எட்டு நாட்டு மகளிர் அணிகள்:
போட்டித்தொடர் வடிவம்
எட்டு துடுப்பாட்ட அணிகளும் நான்கு அணிகள் கொண்ட இரு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் தனது குழுவிலுள்ள அணிகளுடன் விளையாடிகின்றன. ஒவ்வொரு குழுவிலும் முதல்நிலையில் உள்ள மூன்று அணிகள் சூப்பர் சிக்ஸ் எனப்படும் அடுத்த நிலைப் போட்டிகளில் விளையாடுகின்றன. இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஆட வேண்டும். இருப்பினும் தங்கள் குழுவில் இல்லாத மற்ற மூன்று அணிகளுடன் மட்டுமே ஆடுகின்றன. தங்கள் குழுவில் உள்ள அணிகளுடன் ஏற்கெனவே விளையாடிப் பெற்றிருந்த புள்ளிகளை தக்க வைத்துக் கொள்கின்றன. சூப்பர் சிக்சில் முதலாவதாக வரும் இரு அணிகள் இறுதி ஆட்டத்தில் விளையாடுகின்றன.
Remove ads
விளையாட்டரங்கங்கள்
முடிவுகள்
குழு போட்டிகள்
குழு ஏ
குழு பி
சூப்பர் சிக்ஸ் நிலைப் போட்டிகள்
முதலிரண்டு அணிகள் மட்டுமே இறுதி ஆட்டத்தில் விளையாடத் தகுதி பெறும்.
தரவரிசைக்கான ஆட்டங்கள்
ஏழாம் இடத்திற்கான ஆட்டம்
ஐந்தாம் இடத்திற்கான ஆட்டம்
மூன்றாம் இடத்திற்கான ஆட்டம்
இறுதி ஆட்டம்
இறுதி தரநிலைகள்
Remove ads
சான்றுகோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads