2014 சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

2014ஆம் ஆண்டிற்கான சார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தல் 5 கட்டங்களாக நவம்பர் 25 முதல் டிசம்பர் 30 வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் 2014, அக்டோபர் 25 அன்று அறிவித்தது. சம்மு காசுமீர் சட்டமன்ற தேர்தலும் இதனுடன் இணைந்து நடைபெறும். தற்போதுள்ள சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2015, சனவரி 03 அன்று முடிவடைகிறது. இத்தேர்தலில் 20,744,776 (2,07,44,776) மக்கள் 81 சட்டப்பேரவை உறுப்பினர்களை தேர்வு செய்வர். 81இல் 6 தொகுதிகள் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். 28 மலைவாழ் (பழங்குடியினர்) மக்களுக்கு ஒதுக்கப்பட்டதாகும். நிழற்பட அடையாள அட்டை வழங்கப்பட்ட வாக்காளர்கள் 99.06% ஆகும். 24,648 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து தொகுதிகளிலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படவுள்ளது. அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்களிலும் யாருக்கும் வாக்கு செலுத்த விரும்பவில்லை என்ற விருப்பத் தேர்வும் உள்ளது. தேர்தல் முடிவு டிசம்பர் 23 அன்று வாக்குபதிவு எண்ணிக்கையன்றே அறிவிக்கப்படும். ஏழு தொகுதிகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துடன் தாள் (காகிதம்) மூலம் வாக்கு செலுத்தும் வசதியும் இருக்கும், அவை சாம்செட்பூர் கிழக்கு, சாம்செட்பூர் மேற்கு, போகாரோ, தன்பாத், ராஞ்சி, கைடா, கான்கே.[1][2]

விரைவான உண்மைகள் சார்க்கண்டு சட்டப்பேரவையில் 81 இடங்கள் அதிகபட்சமாக 41 தொகுதிகள் தேவைப்படுகிறது, வாக்களித்தோர் ...
Remove ads

வாக்குப்பதிவு

இத்தேர்தலின் வாக்குபதிவு 5 கட்டங்களாக நடைபெற்றது. அவை பின்வருமாறு:

Thumb
ஐந்து கட்டங்களாக நடைபெறும் தேர்தல் பகுதிகள் வண்ணங்களாலும் எண்களாலும் காட்டப்பட்டுமள்ளது.
மேலதிகத் தகவல்கள் தேதி, தொகுதிகள் ...

தேர்தல் அட்டவணை

மேலதிகத் தகவல்கள் தேர்தல் நிகழ்வு, முதல் கட்டம் ...
Remove ads

தேர்தல் முடிவுகள்

மேலதிகத் தகவல்கள் கட்சி, கொடி ...

பாசகவானது அனைத்து சார்க்க்ண்ட் மாணவர்கள் சங்கத்தோடு மட்டும் கூட்டணி வைத்து இத்தேர்தலை சந்தித்தது. சார்க்கண்டின் முதல் முதல்வர் பாபுலால் மாரன்டி தன்வார் (Dhanwar) தொகுதியில் இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சிய லெனிசிசுட்) (விடுதலை) வேட்பாளரிடமும் கிரிதா (Giridih) தொகுதியில் பாசக வேட்பாளரிடமும் தோற்றார். வெளியேறும் முதல்வர் ஏமந்து சோரன் தும்கா & பர்கட் (Dumka and Barhait) என்று இரு தொகுதிகளில் போட்டியிட்டதில் ஒன்றில் மட்டும் வென்றார். இரண்டாவது முதல்வர் அர்சுன் முண்டே கர்சவா (Kharsawa) தொகுதியில் சார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரிடம் தோற்றார். சார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன் போட்டியிடவில்லை. மாநிலத்தின் நான்காவது முதல்வர் கட்சி சாராத ஒருவரான மது கோடா மஞ்கோ (Majhgao) தொகுதியில் சார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரிடம் தோற்றார்.[10] மது கோடாவின் மனைவி கீதா கோடா ஜெய் பாரத் சமதா கட்சி சார்பாக சம்சேத்பூர் தொகுதியில் போட்டியிட்டு சார்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளரை தோற்கடித்து வென்றார்.[11]

வாக்குகள் விழுக்காடு

3% மேல் பெற்ற கட்சிகளின் விபரம்.

மேலதிகத் தகவல்கள் கட்சி, வாக்குகள் % ...

முதல்வர்

சார்க்கண்ட் மாநிலத்தின் பாசக தலைவராக ரகுபார் தாசை பாசக நாடாளுமன்ற குழு தேர்வு செய்துள்ளது.[12] சம்சேத்பூர் கிழக்கு தொகுதியில் 70,000 வாக்குகள் வேறுபாட்டில் வென்ற ரகுபார் தாசு சார்க்கண்டின் பத்தாவது முதல்வராக ஞாயிற்றுக்கிழமை பதவியேற்றுக்கொண்டார்.. சார்க்கண்டின் பழங்குடியினர் அல்லாத முதல் முதல்வர் இவராவார்[13][14] பாசகவும் அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கமும் இத்தேர்தலில் கூட்டணி வைத்திருந்தனர். பாசகவின் 37 உறுப்பினர்களுடன் அனைத்து சார்க்கண்ட் மாணவர்கள் சங்கத்தின் ஐந்து உறுப்பினர்களும் சேர்ந்து இக்கூட்டணி பெரும்பான்மைக்கான 41 இடங்களுக்கு மேல் ஒரு உறுப்பினரை கொண்டுள்ளது.[15]

Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads