2014 பதுளை மண்சரிவு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2014 பதுளை மண்சரிவு என்பது இலங்கையின் மலையகத்தில் பதுளையில் 2014 அக்டோபர் 29 இல் இடம்பெற்ற பெரும் அனர்த்தத்தைத் தந்த ஒரு நிலச்சரிவு ஆகும். இம்மண்சரிவினால் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டனர், மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிருடன் புதையுண்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.[1]
வழமையான பருவப் பெயர்ச்சி மழையை அடுத்து கிட்டத்தட்ட 3 கி.மீ. நீள மண்சரிவு உள்ளூர் நேரம் காலை 07:30 மணியளவில் தலைநகர் கொழும்பில் இருந்து 190 கி.மீ. தூரத்தில் உள்ள கொஸ்லாந்தை, மீரியபெத்தை பகுதிகளில் உள்ள தோட்டக் குடியிருப்புகள் சிலவற்றின் மீது இடம்பெற்றது.[2][3] 200 இற்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என அனர்த்த நிவாரண அமைச்சர் மகிந்த அமரவீர அறிக்கை ஒன்றில் தெரிவித்தார். தொடர்ந்து அவ்விடத்தில் பெய்து வரும் மழையினால் மீட்புப் பணிகள் மிக மந்த நிலையிலேயே இடம்பெற்றன.[4]
இம்மண்சரிவினால் ஆறு தோட்டக் குடியிருப்புகள், மூன்று அரசாங்கக் கட்டடங்கள், இரண்டு பால் சேகரிப்பு நிலையங்கள், இரண்டு கடைகள் மற்றும் ஒரு கோயில் ஆகியன சேதமடைந்துள்ளன. 16 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் அறிவித்தது. காலையில் பாடசாலை சென்றிருந்த பிள்ளைகள், தேயிலைக் கொழுந்து பறிப்பதற்காக பணிக்கு சென்றவர்கள் உயிர்தப்பியுள்ளனர்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads