2014 யுன்னான் நிலநடுக்கம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2014 யுன்னான் நிலநடுக்கம் (2014 Yunnan earthquake) சீனாவின் யுன்னான் மாகாணத்தில் லூதியான் நகரில் 2014 ஆகத்து 3 அன்று 6.1 ரிக்டர் அளவில் இடம்பெற்றது.[3] குறைந்தது 391 பேர் உயிரிழந்தனர், 1,856 பேர் காயமடைந்தனர்.[1][2] 3 பேர் காணாமல் போயுள்ளனர். 12,000 குடிமனைகள் இடிந்து வீழ்ந்துள்ளன, 30,000 சேதமடைந்தன.[4] ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வத் துறையின் அறிக்கைப்படி, வென்பிங்கிற்கு வடமேற்கே 11 km (6.8 mi) தூரத்தில் உள்ளூர் நேரம் 16:30 (08:30 ஒசநே) இற்கு இடம்பெற்றது.[5][6][7]

தென்கிழக்காசியாவின் இப்பிராந்தியத்தில் ஏற்படும் நிலநடுக்கங்கள், குறிப்பாக இமாலய மலைப்பகுதியில் இடம்பெற்றுவரும் மலையாக்கச் சுழற்சி காரணமாக நிகழ்கின்றது. மேற்கே ஆப்கானித்தான் முதல் கிழக்கே பர்மா, மற்றும் சீனா வரை யூரேசியப் புவித்தட்டு, இந்திய-ஆஸ்திரேலியப் புவித்தட்டு ஆகியவற்றின் சிக்கலான இடைத்தாக்கத்தினால், பல ஆழமற்ற நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன.
Remove ads
சேதங்களும் இழப்புகளும்
நிலநடுக்கம் ஷோடொங் நகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பெரும் இழப்புகளைத் தோற்றுவித்துள்ளது. மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன.[8] 391 பேர் உயிரிழந்ததாக சீன அதிகாரபூர்வத் தகவல்கள் வெளிவந்துள்ளன. 1,856 பேர் காயமடைந்தனர்.[1][2]
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் யுன்னான் தலைநகர் குன்மிங், மற்றும் அயல் மாகாணமான சிச்சுவானின் சொங்கிங், லெசான், செங்டு நகரங்களிலும் உணரப்பட்டது.[9] லூதியான் நகரில் 12,000 வீடுகள் சேதமடைந்தன.[10]
Remove ads
குறிப்புகள்
- The death count was published at 12:42 (UTC+8), injured count at 09:56 (UTC+8), and the missing count at 09:32 (UTC+8).
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads