2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2012 கோடைக்கால இணை ஒலிம்பிக் விளையாட்டுகள் (2012 Summer Paralympic Games) பதினைந்தாவது இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இது ஐக்கிய இராச்சியத்தின் இலண்டன் மாநகரில் ஆகத்து 29, 2012 முதல் செப்டம்பர் 9, 2012 வரை நடைபெற்றது.
2012இல் இலண்டன் மூன்றாம் முறையாக ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏற்று நடத்துகின்ற போதும் இணை ஒலிம்பிக் விளையாட்டுக்களை நடத்துவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும் இந்த விளையாட்டுக்கள் ஐக்கிய இராச்சியத்தில் இரண்டாம் முறையாக நடைபெறுகின்றன; 1984ஆம் ஆண்டின் கோடைக்கால இணை ஒலிம்பிக் ஐக்கிய இராச்சியத்தின் இசுடோக் மண்டெவில்லிலும் ஐக்கிய அமெரிக்காவின் நியூயார்க் நகரிலும் கூட்டாக நடைபெற்றன.
1948ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகள் இலண்டனில் துவங்கப்பட்ட அதே நாளில் உடல் குறையுடையோருக்கான முதல் அமைப்புசார் விளையாட்டுப் போட்டிகள் துவங்கப்பட்டன. இந்தப் போட்டிகளை இசுடோக் மண்டெவில் மருத்துவமனையின் மருத்துவர் லுட்விக் கட்மான்[1] தண்டுவடத்தில் காயப்பட்ட பிரித்தானிய இரண்டாம் உலகப் போர் முன்னாள் வீரர்களுக்காக ஏற்பாடு செய்தார். இந்த முதல் போட்டிகள் உலக சக்கர நாற்காலி மற்றும் உறுப்பிழந்தோர் விளையாட்டுக்கள் என அழைக்கப்பட்டன.[2]
Remove ads
பங்குபற்றும் நாடுகள்
2012 லண்டன் இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியே அதிக எண்ணிக்கையான போட்டியாளர்கள் பங்குபற்றும் போட்டியாகவும் அதிக எண்ணிக்கையான நாடுகள் பங்குபற்றும் போட்டியாகவும் உள்ளது.[3] 2008 ஒலிம்பிக் போட்டிகளிலும் பார்க்க 250 பேர் கூடுதலாக, அதாவது 4,200 போட்டியாளர்கள் இதில் பங்குபற்றுவர் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றிய நாடுகளிலும் மேலதிகமாக 17 நாடுகள் இதில் பங்குபற்றுகின்றன. பதினான்கு நாடுகள் முதன்முதலாக இப்போட்டிகளில் பங்குபற்றுகின்றன. அவையாவன: அன்டிகுவா மற்றும் பார்படா, புரூணை, கமரூன், கொமோரோஸ், கொங்கோ சனநாயகக் குடியரசு, ஜிபுட்டி, காம்பியா, கினியா-பிஸ்ஸௌ, லைபீரியா, மொசாம்பிக், வட கொரியா, சான் மரீனோ, சொலமன் தீவுகள் மற்றும் அமெரிக்க வெர்ஜின் தீவுகள்.[3] 1988க்குப் பின் முதற்தடவையாக டிரினிடாட் மற்றும் டொபாகோ பங்குபற்றுகிறது.[4][5] போட்ஸ்வானாவும் மலாவியும் ஆரம்பத்தில் பங்குபற்ற எண்ணியிருந்தும், ஆரம்ப விழாவுக்குச் சற்று முன்னர் அரச நிதியுதவியின்மையைக் காரணங் காட்டி போட்டியிலிருந்து விலகிக்கொண்டன. இதில் மலாவி தனது முதல் மாற்றுத்திறணாளர் ஒலிம்பிக் போட்டியில் விளையாட எதிர்பார்த்திருந்தது.[6]
பின்வரும் தேசிய இணை ஒலிம்பிக் குழுக்கள் தமது அணிகளை விளையாட அனுப்பியுள்ளன:[7]
Remove ads
விளையாட்டுக்கள்
ஒவ்வொரு விளையாட்டிலும் உள்ள போட்டிகளின் எண்ணிக்கை அடைப்புக்குள் தரப்பட்டுள்ளது.
|
|
|
Remove ads
நிகழ்ச்சி நிரல்
பதக்கப் பட்டியல்
- குறிப்பு
போட்டி நடத்தும் நாடு ஐக்கிய இராச்சியம்(பிரித்தானியா)
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads