2018 தூத்துக்குடி படுகொலை

தூத்துக்குடியில் 22 மே 2018 இல் நிகழ்ந்த நிகழ்வு From Wikipedia, the free encyclopedia

Remove ads

தூத்துக்குடி படுகொலை[4] அல்லது தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு என்பது மே 22, 2018 அன்று ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது தமிழ்நாடு காவல்துறையும் துணை பாதுகாப்புப் படையும் நடத்திய தாக்குதலைக் குறிக்கும்.

விரைவான உண்மைகள் தூத்துக்குடி படுகொலை, இடம் ...

மே 22, 2018 அன்று ஆயிரக்கணக்கான மக்கள், மாசு விளைவிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடிடக் கோரி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். முற்றுகைப் போராட்டத்தின்போது காவலர்கள் அமைத்திருந்த போக்குவரத்துத் தடைகளை உடைத்தும் காவலரின் கோரிக்கையினை ஏற்காமலும் காவலர்களை தாக்கியும் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத்தினை நோக்கிச் சென்றனர்.[5] அதன் விளைவாக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 16 வயது இளம் பெண் உட்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.[6] மற்றும் 102 இக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து, மறுநாள் மேலும் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த நிகழ்வால் காவல்துறையினர் 132 பேரை கைது செய்துள்ளனர்.[7]

Remove ads

நிகழ்விற்குப் பிறகான அரசின் நடவடிக்கைகள்

கலவரத்தினை கட்டுக்குள் கொண்டுவரும் நிகழ்வின் ஒருபகுதியாக திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு மே 23 இரவு 7 மணிமுதல் இணைய சேவை நிறுத்தப்பட்டது.

ஆலையை நிரந்தரமாக மூடல்

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட மே 28, 2018 அன்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அரசாணைகள் வெளியிடப்பட்டதை அடுத்து, ஸ்டெர்லைட் ஆலைக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் அதிகாரிகள் முத்திரை வைத்தனர். முத்திரை வைக்கப்பட்டதற்கான விளம்பரச் சீட்டை ஆலையின் வெளிப்புறக் கதவில் ஒட்டப்பட்டது.[8][9]

ஒரு நபர் ஆணையம்

இந்நிகழ்வை விசாரிக்க அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் 2018 இல் அமைக்கப்பட்டது.[10] இந்த ஆணையத்தின் அறிக்கை 2022 அக்டோபரில் தமிழ்நாட்டுச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் அப்போதைய மாவட்ட ஆட்சியராக இருந்த என்.வெங்கடேஷ், மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள், ஒரு டி.எஸ்.பி, மூன்று ஆய்வாளர்கள், இரண்டு உதவி ஆய்வாளர்கள், எட்டு காவலர்கள், மூன்று தாசில்தார்கள் உட்பட 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குக் கூடுதலாக அரசு மேலும் தலா ரூ.50 லட்சம் வழங்கப் பரிந்துரைத்தது. பரிந்துரைக்கப்பட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்காமல் பதவி உயர்வு வழங்கப்பட்டதாகக் கூறி மனித உரிமை செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் வழக்கு தொடுத்துள்ளார்.

மேலும் பார்க்க

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads