2021 ஐக்கிய நாடுகளின் கால நிலை மாநாடு

From Wikipedia, the free encyclopedia

2021 ஐக்கிய நாடுகளின் கால நிலை மாநாடு
Remove ads

2021 ஐக்கிய நாடுகளின் கால நிலை மாநாடு, கிளாஸ்கோ (2021 United Nations Climate Change Conference), இதனை பொதுவாக (COP26) என்று அழைப்பர். பருவ நிலை மாற்றம் குறித்தான ஐக்கிய நாடுகள் அவையின் 197 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்த் கொண்ட 26-வது மாநாடான இது[1], ஐக்கிய இராச்சியத்தின், கிளாஸ்கோ நகரத்தில் 31 அக்டோபர் 2021 முதல் 13 நவம்பர் 2021 முடிய நடைபெற்றது. ஐக்கிய இராச்சியத்தின் அமைச்சர் அலோக் சர்மா இம்மாநாட்டிற்கு தலைமை தாங்கினார்.[2][3]

விரைவான உண்மைகள் நாள், அமைவிடம் ...

தற்போது உலகளாவிய வெப்ப நிலை 1.1 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்துள்ளது. இப்படியே சென்றால் 2100-ஆம் ஆண்டிற்குள் உலக் வெப்ப நிலை 2.7 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயர்ந்து விடும் என அறிவியல் அறிஞர்கள் எச்சரித்துள்ளனர்.

மாநாட்டின் தலைவரான அலோக் சர்மா பேசுகையில் “உலக வெப்ப நிலை உயர்வை 2 டிகிரி செல்சியசுக்கு குறைவாக கட்டுப்படுத்த, பாரீஸ் பருவநிலை மாநாட்டில் உலக வெப்ப நிலை 1.5 பாகை செல்சியஸ் அளவிற்கு குறைக்க நாடுகள் திட்டமிடப்பட்டது. 2030-ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய கார்பன் உமிழ்வை பாதியாக குறைக்க வேண்டும் எனக்கூறினார்.

பருவ நிலை மாற்றத்திற்கு காரணமாக விளங்கும் கரியமில வாயு உமிழும் நிலக்கரி, பெட்ரோலியம், எரிவாயுக்கள் போன்ற நிலத்தடி புதைபடிமங்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் எரிசக்திக்கு மாற்றாக சூரிய ஆற்றல், நீர் ஆற்றல், காற்று ஆற்றல், அணு ஆற்றல்களை பயன்படுத்த இம்மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது.

Remove ads

மாநாட்டின் முக்கிய முடிவுகள்

  • உலகளாவிய பருவநிலையை 1.5 பாகை செல்சியஸ் அளவுக்கு மேல் அதிகரிக்காமல் தடுக்க பருவநிலை மாற்ற குழு முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த இலக்கினை எட்ட இந்தியா மற்றும் சீனா ஒத்துழைப்பு தருவதாக கூறியுள்ளது.
  • அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் 2050-ஆம் ஆண்டுக்குள் கரியமில் வாயு உமிழ்வை பூஜ்ஜியம் இலக்கை எட்ட முயற்சி மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. சீனா 2060-ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை எட்ட உள்ளதாக கூறியுள்ளது. இந்தப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ள இந்தியா 2070-ஆம் ஆண்டுக்குள் இந்த இலக்கை அடைய உள்ளதாக உறுதியளித்துள்ளது.
  • 2015-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தத்தின்படி, 2020-ஆம் ஆண்டில், நாடுகள் பயன்படுத்திய எரிசக்தி ஆற்றல் விவரத்தை வழங்க வேண்டும்.
  • 2021 கிளாஸ்கோ மாநாட்டில் வளர்ந்துவரும் நாடுகளின் தலைவர்கள், பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்ட நாடுகள் பருவநிலை மாற்றத்திற்கு ஒதுக்குவதாக கூறும் நிதியை சரியான நேரத்துக்கு ஒதுக்குவதில்லை என்று குற்றம் சாட்டினர்.
Remove ads

கார்பன் உமிழ்வில் இந்தியாவின் இடம்

உலக மக்கள் தொகையில் 17% மக்கள் இந்தியாவில் வசித்து வந்தாலும், கரியமில வாயு வெளியீட்டில், மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா கடைசி இடத்திலேயே உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads