2024 இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் தேர்தல்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
2024 இந்தோனேசியக் குடியரசுத் தலைவர் தேர்தல் (2024 Indonesian presidential election), இந்தோனேசியா நாட்டின் 2024 - 2029 பதவிக் காலத்திற்கான குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவரை வாக்காளர்களள் நேரடித் தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டனர். இத்தேர்தல் 14 பிப்ரவரி 2024 (புதன் கிழமை) அன்று நடைபெற்றது. [1]இத்தேர்தலை இந்தோனேசியாவின் தேர்தல் ஆணையம் தலைமையில் நடத்தப்பட்டது. இந்தோனேசியா அரசியலமைப்புச் சட்டத்தின்படி, இரண்டு முறை குடியரசுத் தலைவர் பதவி வகித்த ஜோக்கோ விடோடோ இத்தேர்தலில் போட்டியிட முடியாது. இத்தேர்தல் முடிவில் பிரபோவோ சுபியாந்தோ குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குடியரசுத் தலைவர் மற்றும் துணை குடியரசுத் தலைவர் பதவிகளுக்கான தேர்தல், 2024 இந்தோனேசிய பொதுத் தேர்தலுடன் சேர்த்து இந்தோனேசியா முழுவதும் 14 பிப்ரவரி 2024 அன்று நடைபெற்றது. பொதுத் தேர்தலில் நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபை உறுப்பினர்கள் மற்றும் மாகாண சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் நேரடியாக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குடியரசுத் தலைவர் தேர்தல் முடிவில் பிரபோவோ சுபியாந்தோ குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள்
உலகின் மூன்றாவது பெரிய ஜனநாயக நாடான இந்தோனேசியா நாட்டின் குடியரசுத் தலைவர் மற்றும் துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் மூன்று கூட்டணிக் கட்சிகளின் 3 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். அவர்கள் வருமாறு: பிரபோவோ சுபியாந்தோ, கஞ்சர் பிரனோவோ (Ganjar Pranowo) மற்றும் அனீஸ் பஸ்வேதன் (Anies Baswedan)[2]
துணை குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளர்கள்
முஹைமின் இஸ்கந்தர், மஹ்ஃபுட் எம்.டி., மற்றும் ஜிப்ரான் ரகாபுமிங் ராகா ஆகியோர் துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
Remove ads
தேர்தல் அட்டவணை
குடியரசுத் தலைவர் தேர்தலில் இழுபறி ஏற்படின் இரண்டாவது சுற்று தேர்தல் நடத்தப்படும்[3]
Remove ads
வேட்பாளர்கள்
தேர்வு முடிவுகள்
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads