2025 மியான்மர் நிலநடுக்கம்

மியான்மரின் சாகிங் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

2025 மார்ச் 28 அன்று 12:50:54 மணிக்கு, மியான்மரின் சாகைங்கு பகுதியில் 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலைக்கு அருகில் இதன் மையம் இருந்தது. இந்தத் திருப்புப் பிளவுப்பெயர்ச்சி அதிர்வு அதிகபட்ச மாற்றியமைக்கப்பட்ட மெர்கல்லி அளவுமுறையில் IX என்ற மிகத்தீவிர அளவை எட்டியது.[2] இது 1912-இற்குப் பிறகு மியான்மரைத் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கமும்,[3] மியான்மரின் நவீன வரலாற்றில் 1930 பாகோ நிலநடுக்கத்திற்குப் பிறகு இரண்டாவது மிக மோசமான நிலநடுக்கமும் ஆகும்.[4] இந்த நிலநடுக்கம் மியான்மரில் பரவலான சேதத்தையும் அண்டை நாடான தாய்லாந்தில் குறிப்பிடத்தக்க சேதத்தையும் ஏற்படுத்தியது. சீனாவின் யுன்னானிலும் நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமடைந்தன.

விரைவான உண்மைகள் நிலநடுக்க அளவு, ஆழம் ...

இந்த நிலநடுக்கத்தால் மியான்மரில் 4,430-இற்கும் மேற்பட்டோரும், தாய்லாந்தில் 14 பேரும் உயிரிழந்தனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்,[5] 5491-இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பேங்காக்கில் இடிந்து விழுந்த கட்டுமானத் தளம் உட்பட நூற்றுக்கணக்கானோர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாங்காக் நகரம், அதன் ஆழமற்ற புவியியல் காரணமாக, தொலைதூரத்திலிருந்து வரும் நில அதிர்வு அலைகளுக்கு மிகவும் பாதிக்கப்படக்கூடியது. மேலும் விழிப்புணர்வு இல்லாததால், நிலநடுக்கம் தொடர்பான தாக்கங்களுக்கு நகரம் அதிகம் பாதிக்கப்பட்டது.[6][7] 2025 மார்ச் 28 நிலவரப்படி, அதிகாரிகள் அவசரகாலநிலையை அறிவித்தனர், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.[8][9] மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டுப் போர் பேரிடர் நிவாரணத்தில் சிரமத்தை அதிகரித்துள்ளது.[10]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads