அக்காத்
அக்காடியப் பேரரசின் தலைநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
அக்காத் (Akkad) என்பது வடக்கு மெசொப்பொத்தேமியாவில் யூபிரிடிஸ் நதியின் இடது கரையில் அமைந்திருந்த அக்காடியப் பேரரசின் தலைநகரமாகும். கிமு 2334 முதல் 2154 முடிய 180 ஆண்டுகள் அக்காத் நகரம் செழிப்புடன் விளங்கியது. தற்போது இந்நகர இது இன்றைய ஈராக்கின் தலைநகரான பாக்தாத்திலிருந்து சுமார் 50 கி.மீ. தென்மேற்குத் திசையில் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. இந்நகரம், பபிலோனியாவின் எழுச்சிக்கு முன், கி.மு.24 - கி.மு. 22 ஆம் நூற்றாண்டுகளில் சிறப்பாக விளங்கியது. இக்காலப்பகுதியில் அக்கதியர்கள் அவர்களது போர்த் திறமைகளுக்கு புகழ் பெற்று விளங்கினார்கள். அக்காத் அங்கு பேசப்படும் அக்காத் மொழிக்கு பெயர் வர காரணமாயிற்று,

Remove ads
வரலாறு
நகரம் பற்றிய கிடைக்கும் பழைமையான ஆதாரங்கள் கிமு 23வது நூற்றாண்டைச் சேர்ந்த சார்கான் அரசன் காலத்தவையாகும். சார்கான அக்காத் சுமேரியா வை இணைத்து ஆண்ட முதலாவது அரசனாகக் கருதப்படுகிறார். இவரது ஆட்சியில் மத்திய தரைக்கடல் வரை இராச்சியம் பரவியிருந்தது.
பிந்திய காலங்களில், பபிலோனிய அரசரின் பட்டங்களில் "அக்காத் மற்றும் சுமேரியாவின் அரசன் என்ற சொல் பாவிக்கப்பட்டது"
பெயர்
விவிலியத்தில் ஒரு முறை இந்நகரின் பெயர் பழைய ஏற்பாட்டில் கூறப்பட்டுள்ளது (ஆதியாகமம் 10:10)[1]
ஆகேத் என்ற பெயர் அக்காத் என்ற பெயரின் சுமேரிய மருவலாக இருக்கலாம் என நம்பப்படுக்கிறது. ஆகேத் என்ற பெயர் "தீயின் முடி" என பொருள்பட்டிருக்கலாம்"[2].
மன்னர்கள் ஆட்சிக்காலம்
Remove ads
இதனையும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads