அக்கிகித்தோ

தற்போதைய சப்பானிய பேரரசர் From Wikipedia, the free encyclopedia

அக்கிகித்தோ
Remove ads

அக்கிகித்தோ (Akihito, யப்பானிய மொழி: 明仁, பிறப்பு: 23 டிசம்பர் 1933) சப்பான் நாட்டின் முன்னாள் பேரரசர் ஆவார். இவர் சப்பானின் பாரம்பரிய வம்சாவழியினர் ஆட்சிமுறை வரிசையில் 125 ஆவது பேரரசராக இருந்தார். 1989 சனவரி 7 முதல் 30 ஏப்ரல் 2019 ஆம் தேதிவரை செவ்வந்தி அரியணையில் அமர்ந்தது பேரரசராக இருந்தார். இவருக்குப் பிறகு இவரின் மூத்த மகன் பேரரசராகப் பெறுப்பேற்றுக் கொண்டார்

விரைவான உண்மைகள் அக்கிகித்தோ 明仁, சப்பானியப் பேரரசர் ...
Remove ads

பிறப்பு, கல்வி

அகிகித்தோ, முந்தைய பேரரசர் ஷோவா என்றழைக்கப்படும் ஹிரோஹித்தோவிற்கும், பேரரசி கொஜுன் அவர்களுக்கும் முதல் மகனாகவும், ஐந்தாவது குழந்தையாகவும் பிறந்தார். குழந்தை பருவத்திலேயே சுகு இளவரசராக அழைக்கப்பட்டு வளர்க்கப்பட்டார். ஆரம்பத்தில் சிறப்பு தனி வகுப்புகள் மூலம் கல்வி கற்கத்தொடங்கிய அகிகித்தோ, பின்னர் ககுஷுயின் என்றழைக்கப்படும் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகளில் 1940 முதல் 1952 வரை கல்வி கற்றார் [1]. பேரரசர் வம்சாவழியில், பேரரசராக தகுதிபெறுபவருக்கு ராணுவ அதிகாரியாக கௌரவ பதவி வழங்கப்பட்டு வந்த சூழ்நிலையில், அகிகித்தோவின் தந்தை ஹிரோஹித்தோ வேண்டுகோளுக்கிணங்க இராணுவ அதிகாரி பதவியை பெற்றுக்கொள்ளவில்லை.

1945 ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டின் டோக்யோ நகரத்தின்மிது அமெரிக்கப்படைகள் குண்டுகள் பொழிந்த போது அகிகித்தோ மற்றும் அவரின் சகோதரர் மசகித்தோ இருவரும் டோக்கியோவை விட்டு வெளியேறினர். அப்போது ஆங்கில மொழியையும், மேற்கத்திய கலாச்சாரங்கள் பற்றியும் கற்றறிந்தார். பின்னர் ககுஷுயின் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் பட்ட மேற்படிப்பை படித்தார். ஆனாலும் அவரால் இறுதிவரை படித்துப் பட்டம் பெற முடியவில்லை.


அகிகித்தோவின் தந்தை ஹிரோகித்தோ சனவரி 7, 1989 அன்று இறந்துவிட [2], அன்று முதல் பேரரசர் அரியணையில் அமர்ந்து ஜப்பான் நாட்டின் பேரரசராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Remove ads

திருமணம்

Thumb
ஜூன் 28, 2005 இல் பேரரசர் அக்கிகித்தோவும் பேரரசி மிக்சிகோவும்

1959 ஆம் ஆண்டு ஏப்ரல் 10 ஆம் நாள் நிஷ்ஹின் நிறுவனத்தின் [1][3] அதிபரான ஹிடசபுரோ சோதாவின் மகள் மிச்சிகோ சோதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தது.

வாரிசுகள்

மேலதிகத் தகவல்கள் பெயர், பிறப்பு ...
Thumb
ஏப்ரல் 10, 1959 -தனது திருமண நாளன்று அகிகித்தோ

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads